/* */

மங்கலதேவி கண்ணகி கோயில் விழா! இந்த ஆண்டும் பிரச்னை!

கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா தொடர்பாக இந்த ஆண்டும் பல்வேறு கருத்து மோதல்கள் உருவாகி வருகின்றன.

HIGHLIGHTS

மங்கலதேவி கண்ணகி கோயில் விழா! இந்த ஆண்டும் பிரச்னை!
X

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் 

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கேரள வனத்துறை, திருச்சூர் வட்ட தொல்லியல் துறை மற்றும் கம்பம் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு என 4 அமைப்புகளும் இணைந்து, கண்ணகி கோயிலை பராமரிக்க வேண்டும் என்று 2016 ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை, நடைமுறைப்படுத்த முடியாத நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஒரு தனியார் அமைப்பால் மேல்முறையீடு செய்யப்பட்ட அந்த வழக்கு எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை.

பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையும், இடுக்கி மாவட்டத்தில் உள்ள கண்ணகி கோவிலும் சம அளவு வனப்பகுதியில் தானே வருகிறது, பிறகு ஏன் அங்கு சுதந்திரமான வழிபாடு முறையும், இங்கு கட்டுப்பாட்டுடன் கூடிய வழிபாட்டு முறையும் பின்பற்றப்படுகிறது என தெரியவில்லை. வழிபாடு என்ற பிபிசி செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த இடுக்கி மாவட்ட ஆட்சியர், ‘‘இரண்டும் வேறு விதமான தன்மை கொண்ட காடுகள்’’ என்று பதிலளித்து இருப்பது உண்மையிலேயே வேதனைக்குரியது.

நமது தேனி மாவட்ட ஆட்சியர் ‘‘கேரள அரசின் பராமரிப்பில் கண்ணகி கோயில் இருப்பதாகவும், ஆனால் கோயில் அமைந்துள்ள இடம் தமிழ்நாட்டுக்கு சொந்தமானது’’ என்று கூறியிருப்பது, தெளிவில்லாத பதிலாகவே உணர முடிகிறது.

1817-இல் கிழக்கிந்திய கம்பெனியால் நடத்தப்பட்ட சர்வே ஆவணத்திலும், 1833 ல் பதிவு செய்யப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கெஜட்டிலும், கண்ணகி கோயில் இருக்கும் இடம் தமிழகத்திற்கு சொந்தமானது என்று தெளிவான ரெக்கார்டுகள் இருக்கும் நிலையில், எந்த அடிப்படையில் நமது மாவட்ட ஆட்சியர் இந்த பதிலை அளித்தார் என்று தெரியவில்லை.


822 கிலோமீட்டர் நீளம் கொண்ட தமிழக-கேரள எல்லைப் பகுதியில், கிட்டத்தட்ட 130 கிலோ மீட்டருக்கு உட்பட்ட பகுதியே இதுவரை முறையாக அளவீடு செய்யப்பட்டிருக்கிறது. 690 கிலோமீட்டர் நீளம் உள்ள எல்லை இன்னமும் முறையாக அளக்கப்படாமல் கிடக்கும் நிலையில், எந்த அடிப்படையில் கண்ணகி கோயிலை கேரளா சொந்தம் கொண்டாடுகிறது என்று தெரியவில்லை.

கேரள உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வழக்கு போட்ட கம்பம் பள்ளத்தாக்கை சேர்ந்த ஒரு அமைப்பு, நீதிமன்றத்திற்கு கொடுத்த ஆவணத்தில், 63 ஆண்டுகளாக கணக்கெடுப்பு செய்யப்படாத ஒரு வனப்பகுதியில் கோயில் இருப்பதாகவும், அந்த இடத்தில் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையே நிலத்தகராறு இருப்பதாகவும் கூறியிருந்த பிரமாணம், முற்றிலும் தமிழக அரசின் இறையாண்மைக்கு எதிரானது என்பதை அந்த அமைப்பு இது வரை உணரவில்லை.

அந்த அமைப்பு கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்த விஷயங்கள் தான், கோயிலை மிக எளிதாக கேரளாவின் பக்கம் தள்ளி விட்டு விட்டது என்று எண்ணத்தோன்றுகிறது. 1982 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெரியார் புலிகள் காப்பக எல்லைக்குள் கோயில் வரவில்லை என்பதை திட்டவட்டமாக ஆவணங்களின் அடிப்படையில் எங்களால் நிரூபிக்க முடியும்.

83 ஆம் ஆண்டு கோயிலுக்கு பாதை போட்ட கேரளாவின் நோக்கம், கோயிலை அபகரிப்பது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. கேரளாவின் அந்த நோக்கத்திற்கு வக்காலத்து வாங்குவது போல் தான் ஒரு அமைப்பின் செயல்பாடு இன்று வரை இருந்து வருகிறது.

1976 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கலைஞர்,20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழகத்தின் வழியாக பாதை போடுவதற்கு திட்டமிடப்பட்ட நிலையில், ஆட்சி கலைப்பு அதற்கு முட்டுக்கட்டை போட்டது.

ஆனால் அன்றிலிருந்து இன்று வரை திராவிடக் கட்சிகள் தான் இந்த மாநிலத்தை ஆண்டு வருகிறது. நினைத்தால் ஒரு வருடத்தில் மிகத் தரமான சாலையை தமிழக எல்லையின் வழியே அமைத்து விட முடியும் என்கிற நிலையில் ஏன் காலதாமதம் செய்கிறார்கள் என்கிற கேள்வியையும் நாம் கண்ணகி பக்தர்கள் முன்வைக்கிறோம்.

பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரை அருவி, அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு ஒரு பாதை போடப்பட்டது சமீபத்தில்... படு பயங்கரமாக இருக்கும் அந்த சாலையை விட பளியங்குடியில் இருந்து கண்ணகி கோயிலுக்கு நாம் போடவிருக்கும் சாலை பெரிய சாகசங்கள் நிறைந்தது அல்ல என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

கேரள எல்லை வழியாக கோயிலுக்குள் நாம் செல்வதாலேயே இரு மாநில அதிகாரிகளின் கூட்டுக் கூட்டத்தை கூட்ட வேண்டிய நெருக்கடி இருக்கிறது. அதுவே தமிழகத்தின் வழியாக பாதை போடப்பட்டால் எவ்வித நெருக்கடியும் இன்றி ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் கூட நாம் கண்ணகி கோவிலுக்கு சென்று வர முடியும்.

உச்ச நீதிமன்றத்தில் அந்த தனியார் அமைப்பு தொடர்ந்த வழக்கு, என்ன நிலையில் இருக்கிறது என்பதை இந்து சமய அறநிலைத்துறை கண்காணித்து, அதை முடிவுக்கு கொண்டு வந்து, எல்லை தாண்டி வழக்குப் போட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அரசின் தொடர் நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறோம்.

திட்டமிட்டபடி வரும் செவ்வாய்க்கிழமை காலை தேனியில் 22 அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்து பேசிவிட்டு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரையும் சந்தித்து மனு அளிக்கிறோம். இந்து சமய அறநிலைத்துறை ஒதுக்கி இருக்கும் 10 லட்ச ரூபாய் பணத்தில் 50 ஆயிரம் பக்தர்களுக்கு அறுசுவை உணவு, குடிநீர் வழங்க முடியும் என்கிற நிலையில், பொதுமக்களிடம் வசூல் செய்து ஒரு அமைப்பு கொடுக்கவிருக்கும் உணவை தவிர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசே முன் நின்று அன்னதானம் அளிக்கும் போது, எதற்காக தனியார் அமைப்புகளை அன்னதானத்திற்கு அழைக்க வேண்டும். 14 கோரிக்கைகளுடன், 22 அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகத்தை சந்திக்கிறோம். கூடுதலாக ஒரு அமைப்பு கேரள உயர்நீதிமன்றத்தில் போட்ட வழக்கின் சாராம்சங்களையும் மனுவாக அளிக்க இருக்கிறோம். பொது மக்களுடைய பார்வைக்கு அந்த மனு வைக்கப்பட்டால் கம்பம் பள்ளத்தாக்கில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்பதையும் தகவலாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

Updated On: 15 April 2024 4:06 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  2. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  4. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  5. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்