/* */

சசிகலாவிடம் ஓ.பி.எஸ் தஞ்சமடை வது உறுதி : தங்க.தமிழ்செல்வன் பேட்டி

சசிகலா வெளியே வரும் போது ஓ.பி.எஸ்., குடும்பத்துடன் காலில் விழுந்து தஞ்சமடைவார் என்றார் மாவட்ட திமுக செயலர் தங்க.தமிழ்செல்வன்

HIGHLIGHTS

சசிகலாவிடம் ஓ.பி.எஸ் தஞ்சமடை வது உறுதி : தங்க.தமிழ்செல்வன் பேட்டி
X

சசிகலா வெளியே வரும் போது ஓ.பி.எஸ்., குடும்பத்துடன் சென்று அவரது காலில் விழுந்து தஞ்சமடைவார் என தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் தெரிவித்தார்.

போடிக்கு இன்று மாலை வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க.,வை வழிநடத்த முடியாமல் ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் திணறி வருகின்றனர். தங்களுக்குள் உள்ள சண்டை சச்சரவுகளை தீர்த்துக் கொள்ள முடியாமல் மோடியிடம் சரணடைந்துள்ளனர்.

தேனி லோக்சபா தேர்தலில் ஓ.பி.எஸ்., மகன் ஐநுாறு கோடி ரூபாய் செலவு செய்து வெற்றி பெற்றார். போடி சட்டசபை தேர்தலில் ஓ.பி.எஸ்., நுாறு கோடி ரூபாய் செலவு செய்து வெற்றி பெற்றார். கடந்த 10 ஆண்டுகளாக ஓ.பி.எஸ்., போடி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. இதனால் மக்கள் என்னிடம் கோரிக்கை வைக்கின்றனர். நான் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன்.

ஆனால், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக என் மீது புகார் சொல்கின்றனர். மக்களுக்கு சேவை செய்வது அதிகார துஷ்பிரயோகமா? ஜெயலலிதா இருக்கும் போதே ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., சசிகலாவின் காலில் விழுந்து சம்பாதித்தார்கள். இப்போதும் சட்டசபை தேர்தலின் போது சசிகலாவை கட்சியில் சேர்ப்பீர்களா என நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்றார். சசிகலா வெளியே வரும் போது ஓ.பி.எஸ்., குடும்பத்துடன் சென்று காலில் விழுந்து சரணடைவார் என்றார் அவர்.

Updated On: 2 Aug 2021 3:27 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!