/* */

இன்ஸ்டாநியூஸ் சொன்னது போல் தேனி அருகே போடி மெட்டில் பாறைகள் சரிந்தன

போடி மெட்டு ரோட்டோரம் பாறைகள் சரியும் அபாயம் உள்ளது என இன்ஸ்டா நியூஸ் சுட்டிக்காட்டியது போல் பாறைகள் சரிந்து விழுந்தன.

HIGHLIGHTS

இன்ஸ்டாநியூஸ் சொன்னது போல் தேனி அருகே போடி மெட்டில் பாறைகள் சரிந்தன
X

போடி மெட்டு ரோட்டோரம் சரி்நது விழுந்த பாறைகள்.

போடி- மூணாறு வழித்தடத்தில் போடியில் இருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ளது போடி மெட்டு. இது கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 644 அடி உயரத்தில் உள்ளது. இந்த போடி மெட்டு செல்வதற்கு 17 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும். இந்த ரோட்டை 18 அடியில் இருந்து 24 அடியாக அகலப்படுத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளை அரைகுறையாக செய்துள்ளனர்.

ரோட்டோரம் செதுக்கிய பாறைகள் எந்த நேரமும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. இது குறித்து இன்ஸ்டாநியூஸ் செய்தி தளம் சுட்டிக்காட்டியது. இந்நிலையில் போடி மெட்டு பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த சாரல் மழைக்கே பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் பாறைகள் சரிந்து விழுவது தொடர்கதையானால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பெரிய விபரீதங்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறான ஒரு நிகழ்வு ஏற்படுவதற்கு முன்னர் நெடுஞ்சாலைத்துறையினர் மலைச் சரிவுகளில் சீரமைக்கப்படாத பாறை பகுதிகளை சீரமைக்க வேண்டும். அதுவே இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.

Updated On: 18 May 2022 6:33 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...