/* */

தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று 12 இடங்களில் தடுப்பூசி முகாம்

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக இன்று 12 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் அறிவிப்பு.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று 12 இடங்களில் தடுப்பூசி முகாம்
X

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் (பைல் படம்)

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் அளவுகள் குறைவாக இருப்பதால் முதலில் வரும் பொதுமக்களுக்கு மட்டுமே தடுப்பூசிக்கான டோக்கன் 12 மையங்களில் வழங்கப்படுகிறது. இதேபோல் இன்று மாநகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா அரங்கத்தில் 400 நபர்களுக்கும், கரந்தை மாநகராட்சி பள்ளி 100 நபர்களுக்கும், வண்டிக்காரத் தெரு பள்ளியில் 150 நபர்களுக்கும், அண்ணாநகர் பள்ளியில் 150 என 12 மையங்களில் கோவிஷீல்டு 1,770 தடுப்பூசிகளும், 400 கோவாக்ஷீன் இரண்டாம் தவனை தடுப்பூசிகளும் போடப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மையங்களிலும் முதலில் வரும் நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 July 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு