/* */

தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு அரசு பள்ளி இருக்கா!

தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு பள்ளி இருக்குமா! என்று அரசு பள்ளி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

HIGHLIGHTS

தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு அரசு பள்ளி இருக்கா!
X

தோழகிரிபட்டி ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் "அகர நூலகம்" என்ற பெயரில் தனி நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அருகே தோழகிரிபட்டி ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் "அகர நூலகம்" என்ற பெயரில் தனி நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ திறந்து வைத்தார். நகர்ப்புறப்பள்ளிகளில் மட்டுமே இது போன்ற தனி நூலகம் இருந்து வந்தது. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் தனி நூலகம் கிடையாது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் முயற்சியால், கிராமபுற மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கை ஏற்படுத்தும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில் 116 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நான்கு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் நூலகத்துக்காக ரூ.3.22 லட்சம் மதிப்பில் தனி கட்டடம் கட்டப்பட்டது. இந்நூலகத்தில் ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 900 நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் குழந்தைகளுக்கான கதைகள், திருக்குறள், பாரதியார் பாரதிதாசன் கவிதைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆங்கில கதைகள் உள்ளிட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளன.

இதேபோல இப்பள்ளி வளாகத்திலுள்ள அங்கன்வாடியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த அங்கன்வாடி மையத்தில் செயல் வழிக்கற்றல் முறையில் கற்றலுக்கான உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடியுடன் கூடிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புடன் தொடங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

இதுகுறித்து அப்பள்ளி முதல்வர் கூறுகையில், மாணவர்கள் வெறும் பாட புத்தகம் மட்டும் படிக்காமல், பல்வேறு நூல்களை படிப்பதால் அவர்களின் அறிவு திறன் மேம்படுவதாகவும், வாசிப்பு திறன் அதிகரிக்கும், தமிழ் உச்சரிப்பு நன்றாக அமையும் என்று கூறுகிறார். அப்பள்ளி மாணவிகள் கூறுகையில், இதுபோன்ற ஒரு நூலகம் தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாக தங்களுக்கு தேவையான நூல்களை நாங்களே படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 7 March 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...