/* */

தஞ்சையில் 127 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த யூனியன் கிளப் சீல் வைக்கப்பட்டது

தஞ்சையில் 127 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான யூனியன் கிளப் கட்டடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

தஞ்சையில் 127 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த  யூனியன் கிளப்  சீல் வைக்கப்பட்டது
X

தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர் 

தஞ்சையில் 127 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான யூனியன் கிளப் கட்டடம் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாக கூறி இன்று பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தஞ்சாவூர் யூனியன் கிளப் கடந்த 1895 ம் ஆண்டு முதல் 127 ஆண்டுகளாக இயங்கி வந்தது. கிளப் உறுப்பினர்கள் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த இடத்தை மாநகராட்சி ஏற்கெனவே கைப்பற்றியது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தடையாணை வாங்கப்பட்டு இருந்த நிலையில், பொது கேளிக்கை சட்டப்படி செயல்படாமல் இயங்கி வந்ததாக கூறி வருவாய் துறையினர் இன்று தஞ்சாவூர் யூனியன் கிளப் முன்பு தண்டோரா அடித்து அறிவிப்பாணை செய்ததோடு யூனியன் கிளப்பை பூட்டி சீல் வைத்தனர்.

தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுதர்சன சபா ஏற்கெனவே மாநகராட்சியால் மீட்கப்பட்ட நிலையில், தஞ்சாவூர் யூனியன் கிளப் தற்போது மீட்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் தொடர்ந்து பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 March 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  4. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  5. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  6. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  8. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  9. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  10. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...