/* */

தஞ்சாவூரில் 90 ஆண்டு கால பழமையான பாலம் இடிக்கும் பணி தீவிரம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சியின் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இந்த பழைய பாலம் இடிக்கப்படுகிறது

HIGHLIGHTS

தஞ்சாவூரில் 90 ஆண்டு கால பழமையான பாலம் இடிக்கும் பணி தீவிரம்
X

ஸ்மார்சிட்டி திட்டப்பணிகளுக்காக தஞ்சாவூரில் இடிக்கப்படும் பழமையான பாலம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சியின் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்.,90 ஆண்டுகள் பழமையான பாலங்கள் இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதால் தஞ்சையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை நகர பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தஞ்சையின் முக்கிய வீதியான காந்திஜி சாலையில் 1934ல் ஆங்கிலேயர் காலத்தில் கல்லணை கால்வாய் அமைக்கும் போது, கட்டப்பட்ட இர்வின் பிரிட்ஜ் என அழைக்கக் கூடிய ஆற்றுபாலம் இடிக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில், மாநில நெடுஞ்சாலை துறை மூலம் 3 கோடி ரூபாயில் புதிய பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பாலம் இடிக்கக் கூடிய பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தஞ்சை நகர பகுதியில் உள்ள முக்கிய சாலைகளான அண்ணா சாலை, காந்தி சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் காந்திஜி சாலையில் செல்ல கூடிய பேருந்துகள் அனைத்தும் பெரிய கோயில் வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது . அதேபோல் தஞ்சையின் நகரை இணைக்கும் கரந்தை- வடவாறு வடவாற்று பாலம் இடிக்கப்பட்டு 3 கோடி ரூபாயில் புதிய பாலம் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கும்பகோணம், திருவையாறில் இருந்து வரும் வாகனங்கள் வடக்குவாசல் சிரேசரித்திரம் சாலை வழியாக செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On: 9 March 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு