/* */

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மாணி கைதைக்கண்டித்து போராட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மாணி கைதை கண்டித்து தஞ்சாவூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மாணி கைதைக்கண்டித்து போராட்டம்
X

தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாத்அமைப்பினர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மாணி கைதை கண்டித்து தஞ்சாவூரில் 500க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடகா உயர்நீதி மன்றத்தை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் ஜமால் உஸ்மாணி கலந்து கொண்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆகியோரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நேற்றிரவு திருக்கானூர்ப்பட்டி பிரிவு சாலையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்து-முஸ்லிம் இடையில் கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசியதாக கிராம நிர்வாக அலுவலர் கௌரிசங்கர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது அதிராம்பட்டினம் போலீஸார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஜமால் உஸ்மானியை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இல்லையென்றால் போராட்டம் தீவிரமடையும் எனவும் எச்சரித்தார்.

Updated On: 20 March 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  4. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  6. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  7. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  8. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  10. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு