/* */

நெல் மூட்டைகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைக்க தார்பாய்கள் தயார்: ஆட்சியர் தகவல்

Today Thanjavur News - மழையினால் எவ்வித நெல் மூட்டைகளும் நனையவில்லை என்பதை ஆட்சியர் உறுதி செய்துள்ளார்

HIGHLIGHTS

Today Thanjavur News | Paddy Bag
X

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் (பைல் படம்)

Today Thanjavur News -தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் தஞ்சாவூர் மண்டலம் நடப்பு கே,எம்,எஸ் 2022- 2022 பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மு்லம் நெல்கொள்முதல் செய்யப்பட்டு. கிடங்குகள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு இயக்கம் செய்யப்பட்டு வருகிறது,

கும்பகோணம் வடடம். கொத்தகுடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் 6.933 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது, மழையினால் நெல் மு்ட்டைகள் நனைந்து விட்டது என்று சில பத்திரிகைகளில் செய்தி வரப்பெற்றதை தொடர்ந்து மேலாளர் (தரக்கட்டுப்பாடு) கொத்தகுடி திறந்தவெளி சேமிப்பு மையத்தை 24,08,2022 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஏற்கெனவே, அங்கு திறந்த வெளியிலிருந்த நெல் மு்ட்டைகள் சரியான முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ததாகவும் முதல் நாள் பெய்த மழையில் ஏதும் நனையவில்லை என்றும் ஆனால் ஒரு அட்டி மட்டும் கீழே அட்டி அமைப் பதற்காக அமைக்கப்பட்ட வெட்டுக்கல் மண் அமைப்பினால் உள் வாங்கியதால் நெல் மு்ட்டைகள் சாய்ந்து விட்டன. அதை மீண்டும் மறு அட்டி அடுக்கும்போது சிலர் அதை புகைப்படமெடுத்து அது மழையில் நனைந்ததாக சுட்டிகாட்டி விட்டதா கவும் தெரிய வந்தது. மழையினால் எவ்வித பாதிப்பும். இழப்பும் இல்லை என்பதோடு. சேமிப்பு மையத்தில் 64 அட்டிகளும் (6.933 மெ.டன்) பாதுகாத்து கருப்பு பாலித்தின் கவர் கொண்டு மூடி சுற்றிலும் கயிறு கட்டி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தஞ்சாவூர் கொத்தகுடி திறந்தவெளி சேமிப்பு மையத்தை (25,08,2022) ஆய்வு செய்து மழையினால் எவ்வித நெல் மூட்டைகளும் நனையவில்லை என்பதை உறுதி செய்துள்ளார்கள். நெல் மூட்டைகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைக்க தார்பாய்கள் தயார் நிலையில் போதிய எண்ணிக்கையில் உள்ளன. திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் அனைத்தையும் ஆய்வு செய்து நெல் மூட்டைகளை பாதுகாக்கவும். நெல்மூட்டைகளை அரவைக்கு துரிதமாக அனுப்பவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று வருங்காலங்களில் நெல் மூட்டைகளை இது போன்று புகார் மற்றும் செய்தி வராமல் மழையிலிருந்து பாதுகாக்க மேற்கூரையிட்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது,

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 Aug 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...