/* */

மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக்குழுவுக்கு தையல் பயிற்சி: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்

தையல் பயிற்சி முடித்த பின் நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக்குழுவுக்கு தையல் பயிற்சி: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்
X

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ்  பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரம், புனவாசல் ஊராட்சியில் செயல்பட்டு வரும் இளந்தென்றல் மாற்றுத்திறனாளி சிறப்பு குழுவில் உள்ள 12 மாற்றுத்திறனாளி குழு உறுப்பினர்களின் கோரிக்கையினை பரிசீலித்து மாற்றுத்திறனாளி குழு உறுப்பினர்கள் நலனை கருத்திற் கொண்டு அவர்கள் வசிக்கும் புனவாசல் ஊராட்சியிலேயே தஞ்சாவூர் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் கிராம சேவை மையத்தில் 30 நாட்கள் தையல் பயற்சிஅளிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும், 12 புதிய தையல் இயந்திரங்கள் மாற்று திறனாளிகளுக்கு வாங்க ஏதுவாக கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு புதிய தையல் இயந்திரம் பெறப்படவுள்ளது. மேலும்,அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தையல் பயிற்சி முடித்தபின் நிரந்தர வருமானம் ஏற்படுத்தி தரும் பொருட்டு தஞ்சாவூர் மகாராஜா சில்ஸ் நிறுவனம் மூலம் மாற்று திறனாளிகளுக்கு துணிகளை வழங்கி ஆயத்த ஆடைகளாக உருவாக்கி மீளபெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்தார்

Updated On: 13 May 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!