/* */

மகளிர் தினத்தையொட்டி மாவட்ட காவல் அலுவலகத்தில் மரகன்றுகள் நடப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

HIGHLIGHTS

மகளிர் தினத்தையொட்டி மாவட்ட காவல் அலுவலகத்தில் மரகன்றுகள் நடப்பட்டது
X

மகளிர் தினத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மரக்கன்று  நட்டு வைத்த தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஏ.கயல்விழி.

மகளிர் தினத்தையொட்டி மாவட்ட காவல் அலுவலகத்தில் 350 மரகன்றுகள் நடப்பட்டது. மேலும் 12 பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது.

மகளிர் தினத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஏ.கயல்விழி பங்கேற்று, பெண்காவலர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக இவ்விழாவில் 350 பெண் காவலர்கள் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் பயன் தரக்கூடிய மா, பலா, வாழை, செம்மரம், புங்கன் சந்தனம் உள்பட பல்வேறு வகையான 350 மரக்கன்றுகளை நட்டனர். மேலும் காவலர்கள் தடைகளை உடைப்போம் என்பதை உணர்ந்தும் வகையில் கண்ணாடியில் தங்களது கைகளை வண்ணங்களில் வைத்து கைரேகை பதிவு செய்தனர். இவ்விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா கந்தபுனேனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 March 2022 7:00 AM GMT

Related News