/* */

தஞ்சையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் கணேசன் ஆலோசனை

வேலை வாய்ப்பு முகாம் 11.6.2022 -ல் தாராசுரம், கேஎஸ்கே பொறியியல் கல்லூரியில் காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை நடக்கிறது

HIGHLIGHTS

தஞ்சையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் கணேசன் ஆலோசனை
X

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையம்,தமிழ்நாடு மாநிலஊரகவாழ்வாதார இயக்கம், தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம், தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கே.எஸ்கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தலைமையில் அரசு தலைமை கொறடா கோவி .செழியன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் மு.வீரராகவராவ் முன்னிலையில் நடைபெற்றது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 11.06.2022 (சனிக்கிழமை) அன்று தாராசுரம், கேஎஸ்கே பொறியியல் மற்றும் தொழில்நுட்பகல்லூரியில்; காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரை நடைபெற உள்ளது. இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களி லிருந்து 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ கல்வி தகுதிகளுக்குரிய வேலை நாடுவோருக்கு 10,000-க்கும் மேற்பட்டவேலை வாய்ப்பினை அளிக்க உள்ளனர்.

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை நாடுநர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவுசெய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362-237037, 9442557037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார் அமைச்சர் . மேலும் இம் முகாம் நடைபெறுவதை பொதுமக்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆட்டோ பிரசாரத்தை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ராமலிங்கம் (மயிலாடுதுறை), மாநிலங்களவை உறுப்பினர்கள் எஸ்.கல்யாணசுந்தரம் , கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஓ.சுகபுத்ரா, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் மு.ஜெகதீசன்; திருச்சி மண்டல இணை இயக்குநர்.மு.சந்திரன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கெண்டனர்.


Updated On: 8 Jun 2022 7:43 AM GMT

Related News