/* */

தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து ஜன.24 -ல் தஞ்சை மாவட்டத்தில் மறியல்

தொழிற்சங்க, தொழிலாளர் நல சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு பெரு நிறுவனங்களுக்காக 44 சட்டங்கள் நான்காக சுருக்கப்பட்டுள்ளன

HIGHLIGHTS

தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து ஜன.24 -ல் தஞ்சை மாவட்டத்தில் மறியல்
X

தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்  மாவட்ட சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது

தொழிலாளர் விரோத ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் மூன்று மையங்களில் ஜனவரி 24 -ஆம் தேதி மாநிலந்தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென ஏஐடியூசி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சை மாவட்ட சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெ.சேவையா தலைமை வைத்தார். ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் அகில இந்திய, மாநில குழு முடிவுகள் பற்றி விரிவாக பேசினார்.

மாவட்ட செயலாளரும், மாநிலச் செயலாளருமான ஆர்.தில்லைவனம் நடைபெற்ற வேலைகள் பற்றி பேசினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன் மாவட்ட துணை செயலாளர்கள் துரை.மதிவாணன்.இரா.செந்தில்நாதன், ஆர்.பி.முத்துக்குமரன், காளிதாஸ் , துணைத் தலைவர்கள் அ.சாமிக்கண்ணு, ஜி.மணிமூர்த்தி, பரிமளா, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன் மின்வாரிய சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவர் பொன். தங்கவேல், மாவட்ட நிர்வாகி சி..தண்டபாணி.

ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, டாஸ்மாக் சங்க மாவட்ட பொருளாளர் என். செழியன் , நுகர் பொருள் வாணிபக் கழக சங்க மாவட்ட பொருளாளர் எஸ். தியாகராஜன், உடல் உழைப்பு சங்க மாவட்ட பொருளாளர் சுதா, கட்டுமான சங்க மாவட்ட துணை தலைவர் பி.செல்வம் உள்ளிட்டோர் பக்கேற்றனர்.

கூட்டத்தில், ஒன்றிய மோடி அரசு கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் விரோத , தொழிலாளர் விரோத கொள்கைகளை கடைபிடித்து வருகிறது. போராடி பெற்ற தொழிற்சங்க, தொழிலாளர் நல சட்டங்கள் பறிக்கப்பட்டுள்ளது.கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக 44 சட்டங்கள் நான்காக சுருக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் , 240 நாட்கள் பணிபுரிந்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்யவும், அனைவருக்கும் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 21,000 நிர்ணயம் செய்யவும் , ஓய்வூதியம் மாதம் ரூ. 6000 -ம் வழங்கவும்.

நலவாரிய செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் , நிதிபலன் களை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வருகிற 24.1.2023 -ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.

தொழிற்சங்கங்களின் முதன்மைக் குறிக்கோளாக தங்கள் வேலைவாய்ப்பு நிலைகளை காப்பாற்றிக் கொள்வதும் மேம்படுத்திக் கொள்வதுமாகும். இந்தக் குறிக்கோளில் ஊதியம், பணி விதிகள், முறையீடு செய்முறைகள், பணியெடுப்பு, பணிநீக்கம் மற்றும் பதவி உயர்வுக்கான விதிகள், பிற வசதிகள்,பணியிடப் பாதுகாப்பு மற்றும் கொள்கைகள் அடங்கும். அந்தக்கொள்கைகளை நிலைநிறுத்தும் வகையிவ் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தை தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய மூன்று மையங்களில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. எனவே அனைத்து தொழிலாளர்களும் மறியல் போராட்டத்தில் பெருவாரியாக பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டுமென இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On: 7 Jan 2023 7:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  3. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  6. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  7. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  8. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  9. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  10. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...