/* */

கண்ணாடி இழை கேபிளை சேதப்படுத்தக்கூடாது: தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் அதிவேக இணையதள வசதி வழங்கும் *பாரத் நெட்*திட்டப்பணிகள் நடக்கின்றன

HIGHLIGHTS

கண்ணாடி இழை கேபிளை சேதப்படுத்தக்கூடாது:  தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
X

பைல் படம்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் அதிவேக இணையதள சேவை வழங்கப்படுவதற்காக அமைக்கப்படும் கண்ணாடி இழை கேபிள்களை தவறான புரிதலுடன் சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் எச்சரித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் அதிவேக இணையதள வசதி வழங்கும் *பாரத் நெட்*திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மு்லம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது, கண்ணாடி இழை (Opticalfibre cable) 85 சதவீதம் மின்கம்பங்கள் மு்லமாகவும.; 15 சதவீதம் தரை வழியாகவும் இணைக்கப் படுகிறது. இதுவரை நமது மாவட்டத்தில் உள்ள மொத்தமுள்ள 589 ஊராட்சிகளில் 588ஊராட்சிகளில் இணைய வசதி வழங்கிட தயார் நிலையில் உள்ளது.

இதற்கான RACK / UPSஉள்ளிட்ட உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் (VPSC) அல்லது அரசுக் கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது, இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சம்பந்த்ப்பட்ட கிராம ஊராட்சியின் செயலாளர் அரசாணையின்படி பொறுப்பாக்கப்பட்டுள்ளார்.

கண்ணாடி இழை (Optical fibre cable) 85 சதவீதம் ஏற்கெனவே பயன்பாட்டிலுள்ள மின்கம்பங்கள் மு்லமாக கொண்டு செல்வதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கண்ணாடி இழை (Optical fibre cable) கொண்டு செல்லக்கூடாது என தடை செய்கின்றனர். இத்திட்டம் முழுமையான அரசின் திட்டம், கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. எனவே இந்தக் கண்ணாடி இழை ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள கம்பங்கள் மு்லம் கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்யக் கூடாது.

மேலும் விளை நிலங்களில் உள்ள மின் கம்பங்கள் வழியாக கண்ணாடி இழைகள் இணைக்கப்படும்போது பயிர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது,கண்ணாடி இழையில் எந்த விதமான உலோகப் பொருட்களும் இல்லை. எனவே இதனைதிருடிச் சென்று காசாக்கலாம் என்ற தவறான புரிதல் வேண்டாம்.

இத்திட்டம் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் போது. ஒவ்வொரு கிராம ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும்அதிவேக இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் POP - மையங்களில் பொருத்தப்பட்டுள்ள UPS. Router, Rack மற்றும் கண்ணாடி இழை வலையமைப்பு உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகளாகும்.

மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும். கண்ணாடி இழை கேபிள்களை துண்டாக்கும் மற்றும் மின் கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடை செய்யும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடுமையாக எச்சரிக்கப்படுகிறது எனமாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார.


Updated On: 19 Dec 2023 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  8. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  9. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு