/* */

மழைக்காலத்தில் வேலை இழப்பு: நிவாரணம் வழங்க கட்டுமானத்தொழிலாளர்கள் கோரிக்கை

மணல்,சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும்

HIGHLIGHTS

மழைக்காலத்தில் வேலை இழப்பு: நிவாரணம் வழங்க கட்டுமானத்தொழிலாளர்கள் கோரிக்கை
X

கட்டுமான ஏ ஐ டி யு சி தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட நிர்வாக குழு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

மழைக் காலத்தில் வேலை இழப்பு ஏற்படும் நாட்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்! கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமான ஏ ஐ டி யு சி தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட நிர்வாக குழு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ஆர்.சேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம் நடைபெற்றுள்ள பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில் பொருளாளர் உ.சௌந்தர்ராஜன், துணைச் செயலாளர் சீனி.சுகுமாரன், துணைத் தலைவர்கள் மு.ராமையன், எம்.சிகப்பியம்மாள், ஜெ.பாலசுப்பிர மணியன், எஸ். ரங்கசாமி, குமார் வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட துணைசெயலாளர் பி.செல்வம் நன்றி கூறினார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: கட்டுமான தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயை தற்போதுள்ள விலைவாசி உயர்வுகளுக்கு ஏற்ப ரூபாய் 6000 மாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும் , பணியின் போது விபத்து ஏற்பட்டால் சிகிச்சைக்குரிய மருத்துவ செலவுகளை முழுமையாக வழங்க வேண்டும், மழைக்காலத்தில் வேலை இழக்கும் நாட்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மணல்,சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் தமிழக அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Construction Workers Welfare Board) என்பது தமிழக அரசினால் கட்டுமானத் தொழிலாளர்கள் நலனிற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் ஒன்று ஆகும். இது தமிழகத் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்குகிறது. 54வகையான கட்டுமான தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கும் நலத்திட்ட உதவிகளுக்கும் இவ்வாரியம் 30.11.1994 அன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள், வேலை வாய்ப்பு என பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு, பணி ஒழுங்கு உள்ளிட்டவற்றிற்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, , விபத்து ஊன நிவாரணம், வீடு கட்ட உதவித்தொகை, ஈமச்சடங்கு, இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம், ஒய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், முடக்கு ஒய்வூதியம், போன்ற நலத்திட்ட உதவிகள் பெறமுடியும். இந்தியா முழுவதும் சிறு, குறு விவசாயிகள், சாலையோர வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் 43.70 கோடி பேர் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


Updated On: 13 Nov 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  5. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  6. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  10. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு