/* */

தஞ்சை பெரிய கோயிலில் சனி பிரதோஷம்

கொரோனா எதிரொலியால், தஞ்சாவூர் பெரியகோவில் மூடப்பட்ட நிலையில், பக்தர்கள் இன்றி சனி பிரதோஷம் எளிமையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

தஞ்சை பெரிய கோயிலில் சனி பிரதோஷம்
X

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷ வழிபாட்டின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். பால், வில்வம்,மஞ்சள்,சந்தனம், தயிர் ஆகிய மங்கல பொருள்களை கொண்டு நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கொரோனா எதிரொலியாக, கடந்த ஏப்.16ம் தேதி கோவில் மூடப்பட்டது. இருப்பினும், கோவிலில் தினமும் நான்கு கால பூஜைக்கள் வழக்கம் போல நடந்து கொண்டு இருக்கிறது.

இருப்பினும், கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், தமிழ் வருடத்தின் முதல் சனி பிரதோஷம் பக்தர்கள் இன்றி நந்தியம் பெருமானுக்கு பால்,மஞ்சள்,சந்தனம் போன்ற மங்கல பொருள்களை கொண்டு சிவச்சாரியார்கள் மட்டுமே வழிபாட்டை நடத்தினர்.

பிரதோஷத்தின் போது பக்தர்கள் இன்றி பெரியகோவில் வெறிச்சோடி காணப்பட்டது. இதை போல கடந்த 2020ம் ஆண்டு பக்தர்கள் இன்றி 12 முறை பிரதோஷ வழிபாடு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 April 2021 3:07 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  2. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  4. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  5. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  6. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  7. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  8. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  10. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு