/* */

கொள்ளிடம் கரையோரப்பகுதிகளில் வெள்ளதடுப்பு முன்னேற்பாடு பணிகள்: கல்வி அமைச்சர் ஆய்வு

காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் கொள்ளிடம் ஆற்றில் 1.80 லட்சம் கனஅடிக்கு மேல் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

கொள்ளிடம் கரையோரப்பகுதிகளில் வெள்ளதடுப்பு முன்னேற்பாடு பணிகள்: கல்வி அமைச்சர்  ஆய்வு
X

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஊராட்சிஒன்றியம், அணைக்கரை ஆய்வு மாளிகையில் கல்லணையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஊராட்சிஒன்றியம், அணைக்கரை ஆய்வு மாளிகையில் கல்லணையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் வெள்ளதடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் அரசுஉயர் அலுவலர்களுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: தமிழக முதலமைச்சரின் உத்தரவுக் கிணங்க தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஊராட்சிஒன்றியம், அணைக்கரை ஆய்வு மாளிகையில் கல்லணையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகமழை பெய்ததன் காரணமாக கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் வெள்ளதடுப்பு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் கனமழையின் காரணமாகமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகஉள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால் அணையில் இருந்துஉபரிநீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 1.80 லட்சம் கனஅடிக்கு மேல் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர் வரத்துஅதிகமாக இருக்கும் என்பதால் ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கஅனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

காவிரிநீர் பாய்ந்து வரும் காவிரி,வெண்ணாறு,கொள்ளிடம் ஆறுகள் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன்பிடிக்கவோ மற்றும் இதரபொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் யாரும் தன் படம் (செல்பி) எடுப்பதை தவிர்த்திட வேண்டும். கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் அதிகம் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் அந்தபகுதிகளில் குழந்தைகளை விளையாடச் செல்லாமல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.

நமது மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய மாவட்ட அளவிலான குழு,கோட்ட அளவிலான குழுக்கள்,வட்டஅளவிலான குழுக்கள்,சரகஅளவினால் குழுக்கள்,முதல் நிலை பணியாற்றுபவர்கள், கால்நடை பராமரிப்பாளர்கள், பாம்புபிடிப்பவர்கள், மரம் வெட்டுபவர்கள்,போதுமான ஜெனரேட்டர், JCB> casuarina pole> power Shaw.மேலும்கரையைவிட்டுதண்ணீர் வெளியேவராமல் இருக்கமணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும்,நமதுமாவட்டத்தில் வெள்ளஅபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டுபல்வேறுமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. காவல்துறை, வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை,சுகாதாரத்துறை, கால்நடைத்துறை ,மின்சாரதுறை மற்றும் அனைத்துதுறைகளும் ஒன்றிணைத்து பல்வேறுகுழுக்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக அடிப்படைவசதிகளுடன் கூடிய தற்காலிக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலபேரிடர் மீட்பு குழு,தீயணைப்புதுறை ஆகியவை தயார் நிலையில் உள்ளது. பாதுகாப்பு முகாமில் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் சுழற்சிமுறையில் இயங்கிவரும் பேரிடர் மேலாண்மை மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 04362-264115, வாட்ஸ் அப் எண். 94458 69848 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டுமழை,வெள்ளத்தினால் ஏற்படும் சேதம் தொடர்பான் புகார்களை பொதுமக்கள் தெரிவித்திடலாம் என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததார்.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க, பள்ளிமாணவ மாணவியர்களுக்கு பள்ளியில் காலை சிற்றுண்டி உணவு வழங்கவுள்ளதை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டுறவு காலனியில் மாநகராட்சி சார்பில் காலை உணவு தயாரிக்கும் பொதுச மையல் கூடம் புதிய கட்டிடத்தின் கட்டுமான பணியினையும், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், இலுப்பக்கோரை ஊராட்சிகணபதி அக்ரஹாரம் (2)ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிநலத்துறை சார்பில் விலையில்லா வீட்டு மனை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு,கும்பகோணம் மாநகராட்சி சார்பில் தாராசுரம் பேரூராட்சி காலை உணவு தயாரிக்கும் பொது சமையல் கூடம் புதிய கட்டிடத்தின் கட்டுமான பணியினையும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், தாராசுரம் பேரூராட்சியில் மகளிர் சுய உதவிகுழுவினரின் அலங்கார பொம்மை விற்பனைகண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா,மாநகராட்சிஆணையர்கள் .சரவணகுமார் (தஞ்சாவூர்), செந்தில் முருகன்(கும்பகோணம்), மாவட்டஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (சத்துணவு) அன்பரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 3 Sep 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?