/* */

பெண் குழந்தைக்கான மாநில விருதுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

வீரதீரச் செயல் புரிந்து வரும் சிறந்த பெண் குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் விருது வழங்கப்படுகிறது

HIGHLIGHTS

பெண் குழந்தைக்கான மாநில விருதுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
X

பைல் படம்

தமிழகஅரசு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும்,பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும்,பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும். பாடுபட்டு வீரதீரச்செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் விதமாக தேசியபெண் குழந்தை தினமாக ஜனவரி 24-ல் மாநில அரசு விருது ஒன்றை அறிவித்து அரசாணை பிறப்பித்து கடந்த 2017 -ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

இதன்படி, வருடந்தோறும் கீழ் குறிப்பிட்டவாறு வீரதீரச் செயல் புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) பாராட்டு பத்திரமும், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல்,பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கான ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.

மேற்குறிப்பிட்டுள்ள வகையில் சாதனை புரிந்த குழந்தைகளுக்கு, வருகிற ஜனவரி 2023-ல் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில அரசு விருது வழங்கிட 5 வயதிற்குமேல் 18 வயதிற்குட்பட்ட (31 டிசம்பர் 2022ன் படி) மேற்குறிப்பிட்டவாறு தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட வி்ண்ணப்பங்களை 24.11.2022 அன்று மாலை 5.45-க்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.

மேலும், விருதிற்கான விண்ணப்பங்கள் தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்டஅலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) , காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டஅலுவலர்கள் வாயிலாகவும் உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம்.

இவ்விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்து, மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையுடன் , சமூகநல இயக்குநர் அலுவலகத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு மாவட்டங்களிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவிலான தேர்வுக் குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, அனைத்து தகுதிகளும் உள்ள ஒருபெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு 24.01.2023 அன்று மாநில அரசின் மூலம் விருது வழங்கப்படும் என்று தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Oct 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!