/* */

தஞ்சை மாவட்டத்தில் புதிய கட்டடங்களை காணொளி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்

முதலமைச்சர்ஸ்டாலின் தலைமைச் செயல கத்தில் இன்று (26.12.2023) காணொளி வாயிலாக தஞ்சை மாவட்டத்தில் கட்டடங்களை திறந்தார்

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டத்தில் புதிய கட்டடங்களை காணொளி மூலம்  முதலமைச்சர் திறந்து வைத்தார்
X

முதலமைச்சர்ஸ்டாலின் தலைமைச் செயல கத்தில் இன்று (26.12.2023) காணொளி வாயிலாக தஞ்சை மாவட்டத்தில் கட்டடங்களை திறந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (26.12.2023) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உட் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடங்கள், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலகக் கட்டடங்கள், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்றக் கட்டடங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஒன்றியம் கள்ளப்பெரம்பூர் II’ ல் சேத்தி ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சியில் குழந்தை நேய பள்ளி உட் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.30.36 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு பொது மக்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற் பொறியாள செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர்உஷாபுண்ணிய மூத்தி, ஒன்றியக் குழுத் தலைவர்.கே.வைஜெயந்திமாலா கேசவன் (தஞ்சாவூர்), ஒன்றியக் குழுத்துணைத் தலைவர் டி.அருளானந்தசாமி, ஊராட்சி மன்றத் தலைவர் கமலாசெல்வராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் அருணாதேவி ரெங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்.பிரபாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Dec 2023 4:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  3. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  4. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  6. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  7. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  9. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!