/* */

மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குனர் திடீர் ஆய்வு..!

தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் மாலதி மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக வருகை புரிந்தார்.

HIGHLIGHTS

மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குனர் திடீர் ஆய்வு..!
X

தூயமல்லி பாரம்பரிய நெல் சாகுபடி வயதினை வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் மாலதி கீழக்குறிச்சியில் ஆய்வுசெய்தார்

மத்திய திட்ட வேளாண் துணை இயக்குனர் மாலதி மதுக்கூர் வட்டாரத்தில் மேற்கொண்ட ஆய்வில், கொச்சின் போர்டு திட்டத்தின் கீழ் இயற்கை உர சாகுபடி ஊக்குவிக்கும் பொழுது மானியத்தில் கட்டப்பட்ட

1200 கன அடி மண்புழு உரத் தொட்டியினை காசாங்காடு பாலசுப்பிரமணியன் வயலில் ஆய்வு செய்தார். பின்னர் நிலக்கடலை ஜி ஜி 34 ரக ஆதார விதை பண்ணையை பார்வையிட்டு நிலக்கடலை ஆதார விதை விடுபாடு இன்றி கொள்முதல் செய்யக் கேட்டுக்கொண்டார்.

பின்னர் மதுக்கூர் வேளாண் விரிவாக்கம் மையத்தினைஆய்வு செய்து தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியத்தில் நெல் நுண்ணூட்டத்தினை வேப்பங்குளம் விவசாயி வீர சுப்பிரமணியனுக்கு வழங்கினார். கீழக்குறிச்சி கிராமத்தில் விவசாயி ரவி வயலில் அமைக்கப்பட்ட வயலை ஆய்வு செய்து விவசாயிகள் உரச்செலவை குறைத்து இயற்கை முறையில் மண்புழு உரத்தினை பயன்படுத்திட கேட்டுக் கொண்டார்.


பின் கீழக்குறிச்சி விவசாயி ராமமூர்த்தி வயலில் நிலக்கடலை ஆதார விதை பண்ணைகளை ஆய்வு செய்து அறுவடை நிலையில் உள்ள பயிர்களில் எவ்வளவு நிலக்கடலை உள்ளது என்பதை ஆய்வு செய்தபின் கீழக்குறிச்சி வேளாண் விரிவாக்கம் மையத்தினையும் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு சுரேஷ் முருகேஷ் மற்றும் உதவி விதை அலுவலர்கள் இளங்கோ, பூபேஷ் ஆகியோர் செய்திருந்தனர். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மதுக்கூர் திட்ட பணிகள் முடிவுற்ற விபரத்தினை எடுத்துக் கூறினார்.

Updated On: 27 March 2024 2:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்