/* */

மக்கள் நேர்காணல் முகாமில் நூறு பயனாளிக ளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

இம்முகாமில் ரூ.11,09,756மதிப்பீட்டில் 100 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் தீபக் ஜேக்கப் வழங்கினார்

HIGHLIGHTS

மக்கள் நேர்காணல் முகாமில் நூறு பயனாளிக ளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
X

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் சரகம், ஓலைப்பாடி ஊராட்சி சமுதாயக்கூட வளாகத்தில் “மக்கள் நேர்காணல் முகாம்” தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப்  தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 100 பயனாளிகளுக்குரூபாய்11இலட்சத்து09ஆயிரம்மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் சரகம், ஓலைப்பாடி ஊராட்சி சமுதாயக்கூட வளாகத்தில் “மக்கள் நேர்காணல் முகாம்” தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் இன்று (20.12.2023)நடைபெற்றது.

“மக்கள் நேர்காணல் முகாமில்” மாவட்ட ஆட்சித்தலைவர் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக் கலைத்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் சார்பில் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்டார்.

இம்முகாமில் ரூ.11,09,756மதிப்பீட்டில்100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர்தீபக் ஜேக்கப் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு ஊராட்சியில் மக்கள் நேர் காணல் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் சரகம், ஓலைப்பாடி ஊராட்சி சமுதாயக் கூடவளாகத்தில் மக்கள் நேர்காணல் முகாம் இன்று நடைபெற்றது.

மேலும்,சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 41பயனாளிகளுக்கு ரூபாய்.53,300 மதிப்பீட்டில் உதவித் தொகையும், மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின்கீழ் ரூ.18,000 மதிப்பீட்டில் ஓய்வூதியமும் 15 பயனாளி களுக்கும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மகளிர் திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழுவிற்கு ரூபாய் 6,50,000மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத் துறை/ உழவர் நலத்துறையின் கீழ் ரூ.32,536 மதிப்பீட்டில் தெளிப்பான் மற்றும் தேக்கு மரக்கன்றுகள் 10 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத் துறையின் சார்பில்ரூ.76,200 மதிப்பீட்டில் விதைகள் மற்றும் நாற்றுகள் 5 பயனாளிகளுக்கும், சுகாதாரத் துறையின் கீழ் மருந்துகள் 9 பயனாளிகளுக்கும், வருவாய்த்துறையின் கீழ் ரூ.2,79,720 மதிப்பீட்டில் வீட்டு மனைப் பட்டா 5 பயனாளிகளுக்கும், பட்டா மாற்றம் சிட்டா அடங்கல் 10 பயளாளிகளுக்கும் என மொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ.11,09,756மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் நலனை மனதில் கொண்டு மக்களுடன் முதல்வர், நான் முதல்வன், காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்தை உறுதி செய், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற பல்வேறு திட்டங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அனைவரும் பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் (கூ.பொ) விக்னேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார், பாபநாசம் வட்டாட்சியர்(பொ) முருககுமார், ஓலைப்பாடி ஊராட்சி மன்ற தலைவர்.விஜி (எ) விஜய்பிரசாத், ஒன்றிய கவுன்சிலர் கே.முருகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், ஊராட்சிக் குழு தலைவர் சுமதிகண்ணதாசன், .முகமதுரிபாய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Dec 2023 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  8. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  9. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  10. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை