/* */

பாபநாசம் அருகே முதியவர் கொலை - நகை கொள்ளை வழக்கில் 3 பேர் கைது

பாபநாசம் அருகே முதியவர் கொலை - நகை கொள்ளை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் அப்துல் ரஜாக்(வயது63,.). ராஜகிரியில் துணிக்கடை நடத்தி வந்தார். மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் மகள் ஹதீஜா பீபி கும்பகோணம் மாநகராட்சி 3வது வார்டு தி.மு.க.கவுன்சிலராக உள்ளார்.

கடந்த 6ம் தேதி இரவு அப்துல் ரஜாக், வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வந்தனர். கொலையாளிகளை பிடிப்பதற்கு 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் அகரமாங்குடியில், சந்தேகத்திற்கிடமாக சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், அய்யம்பேட்டையை சேர்ந்த விஷ்வா, (18,),தாராசுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மெட்டூரில் கடந்த ஏப்.9ம் தேதி நடந்த திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் உள்ள சூர்யா(26)என்பவருடன் சேர்ந்து அப்துல் ரஜாக் தனிமையில் இருப்பதை அறிந்து மூவரும் திருட திட்டமிட்டு, அவரது வீட்டிற்கு சென்ற போது, அப்துல் ரஜாக் கூச்சலிட, அவரை இறுக்கி பிடித்ததில் மூச்சுதிணறி இறந்தார். அங்கிருந்து 24 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 5 பவுன் நகையை திருடி, சூலமங்கலத்தை சேர்ந்த ராஜ செல்வம்(29) என்பவரிடம் நகைகளை அடமானம் வைத்து தெரிய வந்தது. இதையடுத்து அய்யம்பேட்டை போலீசார், விஸ்வா, ராஜ செல்வம், 17 வயது சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

Updated On: 17 April 2022 11:01 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?