/* */

கும்பகோணம் அருகே இ.கம்யூ., கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்

கும்பகோணம் அருகே அய்யாநல்லுார் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கும்பகோணம் அருகே  இ.கம்யூ., கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்
X

அய்யாநல்லுார் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யாநல்லுார் கிராமத்தில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார்.

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சென்ற மாதம் 19ம் தேதி துவங்கி, ஆக்ஸட் 11ம் தேதி வரை நடைபெற்றது. எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு மக்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க வாய்ப்பு அளிக்கவில்லை. குறிப்பாக விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டம், மின்சார திருத்த சட்டம், சுற்றுசூழல் சட்டம் இவைகளை கடந்த சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளின் போன்களை ஓட்டுக்கேட்பது போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அனுமதி வழங்கவில்லை.

தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், கூட்டத்தொடர் திடீரொன ஒத்திவைக்கப்பட்டது. எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் நாடாளுமன்றத்தை தோழமை கட்சியுடன் இணைந்து நடத்தி வருகிறது. இதில் மத்திய அரசு நிறைவவேற்றியுள்ள சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் மக்கள் நாடாளுமன்றம் நடைபெற்றுள்ளது. தமிழக பா.ஜ.,வில் சமூக விரோதிகள் போலீசாரால் தேடப்படும் ரவுடிகள் தான் நிர்வாகிகளாக உள்ளனர். ஒட்டுமொத்த சமூக விரோதிகளின் கூடராமாக தமிழக பா.ஜ.,உள்ளது. பா.ஜ.,வினர் மீது எழும் குற்றசாட்டுகளில் இருந்து தப்பிக்க, மத்தியில் பா.ஜ.,ஆட்சியில் இருப்பதால், அதை கவசமாக பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் என்பது வரவேறக்கத்தக்கது. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தீவிரமாக முயன்று வருகின்றனர். கூட்டுறவு மானிய கோரிக்கையின் போது, தமிழகத்தில் பல்வேறு கூட்டுறவு அமைப்புகளில் அ.தி.மு.க., அரசு கோடிக்கான ரூபாய்களை முறைகேடு செய்தது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊழல் அற்ற நல்ல ஆட்சியை நடத்தி,மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற உணர்வுடன் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது 9 மாவட்டங்ளில் ஊராட்சி தேர்தல் செப் 15 ம் தேதிக்குள்ளாக நடைபெறுகிறது. அதில் தி.மு.க.,வுடனான கூட்டணி தொடரும். மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு பிறகு கருத்துக்கள் கூறப்படும் என அவர் தெரிவித்தார்.

Updated On: 27 Aug 2021 10:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு