/* */

வீரமரணமடைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்துக்கு தயாராகும் ஐம்பொன் சிலை

ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணமடைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்துக்கு கும்பகோணத்தில் ஐம்பொன் சிலை தயாராகி வருகிறது.

HIGHLIGHTS

வீரமரணமடைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்துக்கு தயாராகும் ஐம்பொன் சிலை
X

கடலூரைச் சேர்ந்த ஷைன் இந்தியன் சோல்ஷர் சோசியல் நல அறக்கட்டளை சார்பில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு, ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 120 கிலோ எடையில் மார்பளவு ஐம்பொன் சிலை கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து ஐம்பொன் சிலைக்கான வார்ப்பட நிகழ்வு கும்பகோணம் அரியத்திடல் ராமசாமி சிற்பகூடத்தில், அறக்கட்டளை நிறுவனர் மிலிட்ரி பாபு தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில், சிட்டி யூனியன் வங்கி பவுண்டேஷன் தலைவர் பாலசுப்ரமணியன், ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள், கும்பகோணம் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன், ஸ்தபதி ராம்குமார், தொழிலதிபர்கள் சவுமியநாராயணன், கடலூர்பாலு, சிதம்பரம் சாம்போசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில், அறக்கட்டளையின் துணைத் தலைவர் சுரேஷ்கண்ணன், ஒருங்கிணைப்பாளர்கள் அரவிந்த், ரங்காசேட், சுபேதார் குமார், சாரல்சங்கர், கும்பகோணம் முன்னாள் படைவீரர்கள் மேஜர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில், பிபின் ராவத் உருவப்படத்தை வைத்து பூர்ணாஹூதி நடத்தப்பட்டு, பின்னர் ஐம்பொன் சிலைக்கான வார்ப்பு நடைபெற்றது.

இதுகுறித்து அறக்கட்டளையின் தலைவர் மிலிட்டரி பாபு கூறும்போது

130 கோடி மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் சேவையில், தன்னை ஈடுபடுத்திக்கொண்டு படிப்படியாக உயர்ந்து உலகின் மாபெரும் சக்தியாக விளங்கி, இந்திய திருநாட்டின் முப்படை தளபதியாக சிறப்பாக சேவையாற்றி வந்த சமயத்தில், தமிழகத்தில் குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின்ராவத் வீரமரணமடைந்தார்.

ஆனால், அவர் மறைந்தாலும், இந்த நாட்டு இராணுவ வீரர்களின் நாடி நரம்பு குருதியில் கலந்துள்ள அவருக்கு உயிர்ப்பு கொடுக்கும் நோக்கில் முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு திருஉருவச்சிலையை உருவாக்க முடிவெடுத்தோம்.

இதுவரை இராணுவ வீரர்களுக்கு ஐம்பொன்னால் சிலை எங்கும் உருவாக்கப்படவில்லை. எனவே ஒரு இராணுவ வீரருக்காக உருவாக்கப்படும் உலகின் முதல் ஐம்பொன் சிலையை, இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழக மண்ணில் எங்களது அமைப்பின் மூலம், முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவோடும் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது.

சிலைக்கான பணிகள் நிறைவடைந்ததும், உருவச்சிலையை சிதம்பரத்திலிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக ஆறு மாநிலங்கள் வழியாக புதுடெல்லிக்கு கொண்டு சென்று இந்தியா கேட் அருகே உள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில், பிரதமர் நரேந்திரமோடி, இராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் தற்போதைய முப்படை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாவானே ஆகியோர் முன்னிலையில் ஒப்படைக்க உள்ளோம் என்றார்.

Updated On: 16 Feb 2022 5:26 PM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...