/* */

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய கோரி தமுமுக ஆர்பாட்டம்

பத்தாண்டுகளுக்கும் மேலாக உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தமுமுக ஆர்பாட்டம்.

HIGHLIGHTS

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய கோரி தமுமுக ஆர்பாட்டம்
X

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தென்காசியில் த.மு.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சிறைவாசிகளை சாதி, மத, பேதம் இல்லாமல் விடுதலை செய்ய கோரி தென்காசியில் த.மு.மு.க -வினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் அண்ணா நூற்றாண்டு விழா, மற்றும் பிற தலைவர்கள் பெயரில் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வாறு செய்யும் பொழுது இஸ்லாமிய சமூக மக்களை மட்டும் விடுதலை செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக தென்காசியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கொடி மரத்திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் கோவை செய்யது தலைமை தாங்கினார்.

10 ஆண்டுகளுக்கு மேலாக குற்றம் நிரூபிக்கப்படாமல் விசாரணைக் கைதிகளாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் சிறை தண்டனை அனுபவித்து நோயால் பாதிக்கப்பட்டுள்ள நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளையும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி போன்றவர்களையும் கருணை அடிப்படையில், ஜாதி மத பேதமில்லாமல் விடுதலை செய்யக் கோரி தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஜாதி மத பேதமில்லாமல் அனைவரையும் சமமாக பார்த்து விடுதலை செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. சிறையில் வாடும் சிறைவாசிகளை சாதி, மதம், மொழியின் பெயரால் பாகுபாடு காட்டுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதனை ஆட்சியாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே சட்டம், நீதியின் அடிப்படையில் அனைவருக்கும் சமமாக பார்த்து விடுதலை வழங்க வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றதாக தெரிவித்துள்ளனர்.

Updated On: 6 Dec 2021 5:25 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!