/* */

தபால் வாக்குப்பதிவு- ஆர்வமுடன் வாக்களித்த போலீசார்

தபால் வாக்குப்பதிவு- ஆர்வமுடன் வாக்களித்த போலீசார்
X

தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினருக்காக நடைபெற்ற தபால் வாக்கு முகாமில் போலீசார் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் வாக்குபதிவு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார், ஊர்காவல் படையினருக்கான தபால் வாக்கு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

இதில் தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1359 போலீசார் மற்றும் 165 ஊர் காவல் படையினர் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கான தபால் வாக்குபதிவு ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் போலீசார் மாஸ்க் அணிந்து உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் ஆர்வமுடன் வரிசையில் நின்று பாதுகாப்பான முறையில் வாக்கு அளித்து சென்றனர்.

Updated On: 31 March 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  5. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  6. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  7. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  9. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  10. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!