/* */

திமுக வன்முறையால் வளர்ந்த கட்சி - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி!

திமுக வன்முறையால் வளர்ந்த கட்சி எனவும் தமிழக முதல்வர் தான் மாட்டிக் கொள்வோம் என்ற பதட்டம் காரணமாகவே பாஜகவை மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்டு இருப்பதாக புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

HIGHLIGHTS

திமுக வன்முறையால் வளர்ந்த கட்சி - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி!
X

பட விளக்கம்: தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது எடுத்த படம்.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்ற புத்தகத்தை வெளியிட்டார்,

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவை தோலுரித்து காட்ட வேண்டிய நேரம் இது எனவும் திமுக வன்முறையால் வளர்ந்த கட்சி,என்ற அடிப்படையில் தமிழக முதல்வர் தனது பொறுப்பை உணராமல் மேடை பேச்சாளரை போல் பேசி வருகிறார். மேலும் தமிழ்நாட்டிற்கு தவறான முன் உதாரணத்தை தமிழகம் முதல்வர் தோற்றுவிக்கிறார்.

பதட்டம் காரணமாகவே தமிழக முதல்வர் பாஜகவை எச்சரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். குற்றம் உள்ள மனது குறுகுறுக்கும் என்ற வகையில், தான் மாட்டிக் கொள்வோம் என்பதற்காக இவ்வாறு செயல்படுகிறார்.

உண்மையை மறைத்து உடல் நலத்தை காரணம் காட்டி ஒத்துழைக்காதது என்பது தவறான செயல். மேலும் இவ்வாறு செந்தில் பாலாஜியை பாதுகாப்பது என்பது தண்ணீரில் மூழ்கியவனை நீச்சல் தெரியாதவன் பாதுகாப்பதற்கு சமம் எனக் கூறினார்.

செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதில் உள்நோக்கம் இருப்பதாகவும் அந்த வகையில் செந்தில் பாலாஜியின் குடும்பம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் சூசகமாக தெரிவித்தார்.

Updated On: 17 Jun 2023 7:58 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது