/* */

செயல்படாத கண்காணிப்பு குழுக்கள்: நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை கண்காணிப்பு குழுக்கள் செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

செயல்படாத கண்காணிப்பு குழுக்கள்: நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பைல் படம்).

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் என்பது மிகவும் குறைவான அளவிலேயே நடைபெற்று வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இதுநாள்வரை எந்த ஒரு பணிகளும் முழுமையாக நடைபெறவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கண்காணிப்புக்குழு, பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு என பல குழுக்கள் தேர்தல் பணிகள், வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கபடுகிறதா? என கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குழுக்கள் இதுவரை எந்தப் பணியிலும் ஈடுபட வில்லை. காரணம் கேட்டால் போதிய வாகனங்கள் ஒதுக்கப்படவில்லை என்றும், போதிய அளவிலான ஒளிப்பதிவாளரும் நியமிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் நடக்குமா ? நடக்காதா? என்ற குழப்பம் அனைவரிடத்திலும் உள்ளது. இந்த நிகழ்வுகளை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Updated On: 17 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!