/* */

தென்காசியில் மனநலம் பாதிக்கப்பட்ட செவிலியர் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தென்காசியில் மனநலம் பாதிக்கப்பட்ட செவிலியர் உறவினர்களிடம் ஒப்படைப்பு செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

தென்காசியில் மனநலம் பாதிக்கப்பட்ட செவிலியர் உறவினர்களிடம் ஒப்படைப்பு
X

தென்காசியில் மனநலம் பாதிக்கப்பட்ட நர்ஸ் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தென்காசியில் டெல்லியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல் போன நர்ஸ் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார்.

டெல்லியை சேர்ந்த செவிலியர் ரூபி என்பவர் திருவனந்தபுரத்திற்கு நேர்முகத் தேர்வுக்காக வந்த நிலையில் தம்முடைய சான்றிதழ்கள், உடைமைகள் தொலைந்து போனதால் மனநலம் பாதிக்கப்பட்டார். பல இடங்களுக்கும் அலைந்து திரிந்த நிலையில் இறுதியாக தென்காசி பேருந்து நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் காணப்பட்டார்.

பொது மக்கள் கொடுத்த தகவலையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ஜெயபிரகாஷ் தென்காசி வட்ட காவல் துறை உதவியுடன் வடகரையில் உள்ள அன்பு இல்லம் மனநல காப்பகத்தில் அவரை மீட்டு சேர்த்தனர். அவருக்கு முதற்கட்ட முதலுதவி சிகிச்சை, உணவு உடை, ஆற்றுப்படுத்தல் ஆகியவற்றைகாப்பக பொறுப்பாளர் ராஜேஷ் அளித்தார் .

காப்பகத்தில் தங்கியிருந்தாலும் அவரால் தம்முடைய விலாசம், உறவினர் பற்றிய குறிப்புகளை கூற இயலவில்லை. மனநலம் பாதிக்கப்பட்ட அவருக்கு தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் மனநல சிகிச்சை அளிக்கப் பட்டது . தீவிர மனநல பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நோயின் தாக்கம் காரணமாக அவரது விலாசம் தொலைபேசி எண்ணை கூற இயலவில்லை.தன் கணவர் ஒரு மருத்துவ பிரதிநிதி என்பதை மட்டும் மறைமுகமாக கூறினார்.

இதையடுத்து மனநல மருத்துவர் நிர்மல் அந்த நிறுவன அனைத்து மாநில அதிகாரிகள் மூலம் விசாரித்தபோது டெல்லியில் அவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள அவரது தொலைபேசி எண் கிடைக்க பெற்று தொடர்பு கொண்டு ரூபி யின் தற்போதைய பாதிப்பை பற்றி விளக்கி கூறினார்.

இதன் தொடர்ச்சியாக அவரது சகோதரி காப்பகத்தில் உள்ள ரூபியை வீடியோ காலில் தொடர்பு கொண்டு அடையாளம் கண்டு கொண்டார். ரூபியை காணாது அவரது குழந்தைகளும், குடும்பமும் சோகத்தில் இருந்ததாகவும் , இந்த செய்தி அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளதாகவும் அவர்கள் கூறினார்கள். காப்பகம் வந்து அவரை கூட்டி செல்வதாக உறுதியளித்தார்.

இதையடுத்து கடந்த திங்கட் காலை ரயிலில் ரூபியின் குடும்பத்தினர் தென்காசி வந்தடைந்தனர். உறவினர்களை கண்ட ஆனந்தத்தில் ரூபி அவர்களை கட்டிபிடித்து மகிழ்ந்தார். ரூபியின் 12 வயது மகள் தாயை கட்டிப்பிடித்து மகிழ்ந்ததை பார்த்தபோது அனைவரும் கண்களிலும் கண்ணீர் வந்தது.

தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் இணை இயக்குநர் பிரேமலதா முன்னிலையில் ரூபி அவரது குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டார் . மேலும் ஒரு மாத்திற்கான மனநல மாத்திரைகளை வழங்கி தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் உறைவிட மருத்துவர் ராஜேஷ், மனநல மருத்துவர் நிர்மல் , நோடல் ஆபீசர் கார்த்திக் அறிவுடை நம்பி, காப்பக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

ரூபியும் அவரது உறவினர்களும் மாவட்ட அதிகாரிகளுக்கும் காப்பக செவிலியர்கள் , சமூக நல பணியாளர் ,‌ஊழியர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொண்டு விடை பெற்றனர்.

Updated On: 22 Nov 2022 6:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  3. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  4. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  5. வீடியோ
    முதல் நாளே இவ்ளோ வசூலா ? வாரி குவித்த Billa Re-Release !#ajith...
  6. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  7. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  8. ஆன்மீகம்
    மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்