/* */

பாஜகவின் செய்தி தொடர்பாளராக ஆளுநர் செயல்படுகிறார் - துரை வைகோ

Durai Vaiko -பாஜகவின் செய்தி தொடர்பாளராக ஆளுநர் செயல்படுகிறார் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பாஜகவின் செய்தி  தொடர்பாளராக ஆளுநர் செயல்படுகிறார் - துரை வைகோ
X

மாவட்ட ஆட்சியர் ஆகாசிடம் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ மனு வழங்கினார்.

Durai Vaiko -தமிழக ஆளுநர் பாஜகவின் செய்தி தொடர்பாளராகவும், அக்கட்சியின் சித்தாந்தங்களை பரப்பக்கூடியவராக செயல்படுகிறார் எனவே அவரை மாற்ற வேண்டும் என்று அவசியம் ஏற்பட்டுள்ளதாக மதிமுக கட்சியின் தலைமை செயலாளர் துரை வைகோ விமர்சனம் செய்துள்ளார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய தாலுகாக்களில் உளுந்து, பாசி, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்திருந்தனர். தற்போது மகசூல் குறைவாக கிடைக்கப்பெற்ற நிலையில் பயிர் காப்பீடு வழங்கலாம் என ஆட்சியர் அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை பயிர் காப்பீடு வழங்காமல் கால தாமதம் ஆகிய நிலையில் மதிமுக தலைமை செயலாளர் துரை வைகோ விவசாயிகளுடன் ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தென்காசியில் மாவட்ட ஆட்சியர் சிறப்பாக பணியாற்றி வருகிறார். மேலும் பயிர் காப்பீடு உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார். தமிழக ஆளுநர் ஆளுநராக செயல்படாமல் பாஜகவின் செய்தி தொடர்பாளராக செயல்படுகிறார். குறிப்பிட்ட கட்சியின் சித்தாந்தங்களை பரப்பக் கூடியவராக செயல்படுகிறார். தமிழக சட்டசபையின் நிறைவேற்றிய தீர்மானங்களை கிடப்பில் போட்டுள்ளார். எனவே அவரை மாற்ற வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி தற்போது ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவரை சந்திக்க அனுமதி கேட்டு இருந்தேன். ஹைதராபாத்தில் நடைபெற்ற பயணத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது இருவரும் ஒன்றாக உணவருந்தினோம். சுமார் அரை மணி நிறத்துக்கும் மேலாக அவரிடம் கலந்து உரையாடினேன். பேசுவதற்கும் பழகுவதற்கும் இனிமையானவர். அப்போது அவர் தமிழக அரசியல், இந்திய அரசியல், உலக அரசியல் என்ன எல்லா சித்தாந்தங்களையும் குறித்து விவரித்தார். அமெரிக்கா போன்ற மேடை நாடுகளில் வலது சித்தாந்தங்கள் மேலோங்கி உள்ளது. அதுபோன்ற மேலை நாடுகளில் கூட சில இடங்களில் வலது சித்தாந்த கொள்கைகளை கொண்ட பல கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன.

இந்திய அரசியலில் வலது சித்தாந்தம் கொண்ட பாஜக ஆண்டு வந்தாலும் அதற்கு எதிராக உள்ள முற்போக்கு சிந்தனைவாதிகளை ஒன்றிணைக்க இது போன்ற பேரணிகளை நடத்தி வருகிறேன். குறிப்பாக வலது சித்தாந்தத்திற்கு எதிராக தமிழகம் உள்ளது. அதனால்தான் அங்கிருந்து ஒற்றுமை பேரணியை தொடங்கினேன். தமிழகம் எப்பொழுதும் திராவிட கொள்கைகளை அதிகம் கொண்ட மாநிலம். அதனை பின்பற்றுவோர் அதிகம் பேர் உள்ளனர். இந்தியாவில் இருந்து வலது சித்தாந்தத்தை விரைவில் அகற்ற வேண்டும் எவ்வாறு தெரிவித்ததாக துரை வைக்கோ தெரிவித்தார்.

பேட்டியின் போது மாநில துணைச் செயலாளர் திமு ராஜேந்திரன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், அரசு கூடுதல் வழக்கறிஞர் சுப்புராஜ், வழக்கறிஞர் சுப்பையா, தென்காசி நகரச் செயலாளர் வெங்கடேஸ்வரன், உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 Nov 2022 6:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!