/* */

அரசு பஸ் ஏற்பாட்டால் சிரமமின்றி பயணம்- பயணிகள் பாராட்டு

அரசு பஸ் ஏற்பாட்டால் சிரமமின்றி பயணம்- பயணிகள் பாராட்டு
X

தென்காசி மாவட்டம் சுரண்டையிலிருந்து இரவு நேர பேருந்துகள் 9 மணியுடன் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் ஸ்டாண்ட் வெறிச்சாேடியது. மேலும் பேருந்து ஏற்பட்டால் தாங்கள் சிரமமின்றி பயணிப்பதாக பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

கொரோனா இரவு நேர ஊரடங்கு எதிரொலியாக அரசு மற்றும் தனியார் பஸ் சேவைகள் இரவு 9 மணிக்குள் நிறுத்தப்படும் என அரசு அறிவித்தது. இதன் படி அனைத்து பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதே போன்று தென்காசி மாவட்டம் சுரண்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து இரவு 8 மணிக்கு திருநெல்வேலி மற்றும் பாபநாசத்திற்க்கும், இரவு 9 மணிக்கு தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளுக்கும் இயக்கப்பட்டன.

ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு குறித்து அனைவருக்கும் தெரிந்த நிலையில் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பஸ் இயக்கப்படும் நேரத்தை கவனித்து பயணித்தனர். இருப்பினும் பயணிகளின் வசதிக்காக தேவையான பஸ்கள் இயக்கப்படுவதாக பேருந்து நிலைய அலுவலர் சங்கரபாண்டியன் தெரிவித்தார். அரசு பஸ் ஏற்பாட்டால் தாங்கள் சிரமமின்றி பயணிப்பதாக பயணிகள் அரசு பஸ் நிர்வாகத்திற்க்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 22 April 2021 7:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  2. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  3. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு