/* */

தென்காசி மாவட்டம் முழுவதும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விபரம்

தென்காசி மாவட்டத்தில் அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், கட்சிகளின் முழு விபரம்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம் முழுவதும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விபரம்
X

தென்காசி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. நகராட்சி பகுதியில் 180 பதவி இடங்களுக்கு 1042 பேர் போட்டியிட்டனர். அதேபோல் 17 பேரூராட்சிகளுக்கு 260 பணியிடங்களுக்கு 1170 பேர் போட்டியிட்டனர்.

தென்காசி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் திமுக - 11 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும், சுயேட்சை 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல் புளியங்குடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் திமுக 14 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், பாஜக ஒரு இடத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

சங்கரன்கோவில் 30 வார்டுகள் உள்ளது. அதிமுக 12 இடங்களிலும், திமுக 9 இடங்களிலும், சுயச்சை 8 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

கடையநல்லூர் 33 வார்டுகள் உள்ளது. இங்கு அதிமுக 5 இடங்களிலும், திமுக 15 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும், சுயேட்சை 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. இதில் அதிமுக 10 இடங்களிலும், திமுக 7 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், சுயேட்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

சுரண்டை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. இதில் காங்கிரஸ் 10 இடங்களிலும், திமுக 9 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், தேமுதிக ஒரு இடத்திலும், சுயேட்சை ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

ஆலங்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் அதிமுக 4 இடங்களிலும், திமுக 3 இடங்களிலும், தேமுதிக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேட்சை 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

கீழப்பாவூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. அதிமுக உ இடங்களிலும், அமமுக ஓர் இடத்திலும், திமுக 8 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், சுயேட்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் அதிமுக 9 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

இலஞ்சி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது இதில் அதிமுக 5 இடங்களிலும், திமுக 8 இடங்களிலும், சுயேட்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

(செ) புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் திமுக 10 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும், சுயேட்சை இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

பண்பொழி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் திமுக 7 இடங்களிலும், அதிமுக நான்கு இடங்களிலும், சுயேட்சை 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலகரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் திமுக 8 இடங்களிலும், அதிமுக மூன்று இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும், சுயேட்சை மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

ராயகிரி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. திமுக 6 இடங்களிலும், சுயேட்சை 9 இடங்களிலும், வெற்றி பெற்றுள்ளனர்.

சாம்பவர் வடகரை 15 வார்டுகள் உள்ளது. இதில் அதிமுக ஐந்து இடங்களிலும், திமுக 5 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், பாஜக ஒரு இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேட்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

திருவேங்கடம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் திமுக 6 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், சுயேட்சை 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் திமுக 7 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், சுயேட்சை 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

சிவகிரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் திமுக 7 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், இந்தியக் கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், சுயேட்சை 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் திமுக 5 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், சுயச்சை 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

வடகரை கீழ்பிடாகை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் திமுக 14 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், பாஜக ஒரு இடத்திலும், சுயேட்சை இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அச்சன்புதூர் 15 வார்டுகள் உள்ளது. திமுக 5 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும், சுயேட்சை ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆய்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் திமுக 9 இடங்களிலும் அதிமுக 5 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

குற்றாலம் பேரூராட்சியில் 8 வார்டுகள் உள்ளது இதில் அதிமுக 4 இடங்களிலும் திமுக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Updated On: 23 Feb 2022 1:59 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?