/* */

தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருகை: பாதுகாப்பு குறித்து தென்மண்டல ஐஜி ஆய்வு

தென்காசி மாவட்டத்திற்கு டிச 8 -ஆம் தேதி வருகை தரும் முதல்வர் சுமார் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்திற்கு  முதல்வர் வருகை: பாதுகாப்பு குறித்து தென்மண்டல ஐஜி ஆய்வு
X

தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வருகை ஒட்டி ரயில் நிலையம் மற்றும் விழா நடைபெறும் இடத்தை தென்மண்டல ஐஜி ஆஸ்ராகார்க், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட னர்.

தென்காசி மாவட்டத்திற்குதமிழக முதல்வர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுடன் தென்மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் வருகின்ற எட்டாம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்து சுமார் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார். சென்னையில் இருந்து ரயில் மூலம் வரும் முதல்வருக்கு தென்காசி ரயில் நிலையத்தில் திமுக கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் குற்றாலம் சுற்றுலா விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு விழா நடைபெறும் கணக்கப்பிள்ளை வலசைக்கு சாலை மார்க்கமாக செல்கிறார்.

முதலமைச்சர் வருகையை ஒட்டி ஏற்கெனவே வருவாய்த்துறை அமைச்சர் கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் அனைத்து அரசு அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில். வரவேற்பு நடைபெறும் இடங்களான தென்காசி ரயில் நிலையம் , அங்கிருந்து குற்றாலம் செல்லும் சாலைகள், விழா நடைபெறும் இடங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடம் போன்றவை குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் உயர் அதிகாரிகள் மற்றும் தனிப்படை காவல்துறையினருடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில்,கொலை சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்தும், போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஸ் குமார் Iதென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 6 Dec 2022 2:45 AM GMT

Related News