/* */

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி: நிறுவனங்களுக்கு அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி: நிறுவனங்களுக்கு அழைப்பு
X

தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் வெளியிடடுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயகக்த்தின் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் அழகுக்கலை பயிற்சி, சுய வேலைவாய்ப்பிற்கான தையல் பயிற்சி, கணக்கு நிர்வாகம், வாகன ஓட்டுநர் பயிற்சி, கணிணி பதிவு இயக்குபவர், பொது பணி உதவியாளர், வீட்டு சுகாதார உதவியாளர் போன்ற பயிற்சிகள் நடத்துவதற்கு உரிய நிறுவனங்களிடமிருந்து பிரேரணைகள் வரவேற்கப்படுகின்றன.

திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள் தேசிய திறன் வளர்ப்பு அமைப்பின் இணையதளத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப் பட்டிருக்க வேண்டும். பிரதான் மந்திரி கௌசல் கேந்திரா பயிற்சி மையங்களை கொண்ட திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு மூலம் வழங்கப்படும் திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் ஊதிய வேலைவாய்ப்பு திட்டங்களில் இதற்கு முன்னர் விதிமுறைகளின்படி சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டதற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவும்.

தகுதியான பயிற்சி நிறுவனங்கள் தங்களது (நிறுவனம் தொடர்பான முழுவிவரங்கள் அடங்கிய தொகுப்பு) பிரேரணைகளை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தென்காசி - 627811 என்ற முகவரிக்கு 17.09-2021 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Sep 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  3. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  4. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  5. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  9. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்