/* */

தென்காசியில் வணிகர் பாதுகாப்பு செயலி குறித்த விழிப்புணர்வு

தென்காசி சந்தையில் வணிகர் பாதுகாப்பு செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

தென்காசியில் வணிகர் பாதுகாப்பு செயலி குறித்த விழிப்புணர்வு
X

தென்காசி சந்தையில் வணிகர் பாதுகாப்பு செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வணிகர்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, தமிழக அரசு அறிமுகப்படுத்திய வணிகர் பாதுகாப்பு செயலி குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரை இந்திய நாடார்கள் பேரமைப்பினர் காய்கறி சந்தையில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கடந்த சில நாட்களாக வணிகர்கள் தாக்கப்படும் சம்பவம் நடந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் நிறுவனத் தலைவர் சௌந்தர பாண்டிய நாடார் மற்றும் நிர்வாகிகள் கடந்த மாதம் தமிழக முதல்வரையும் டிஜிபி சைலேந்திரபாபுவையும் சந்தித்து வணிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கோரிக்கை மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வணிகர்களை பாதுகாப்பதற்கான காவல் செயலியை தொடங்கி வைத்தார். இந்த செயலி தொடர்பான விழிப்புணர்வை இந்திய நாடார்கள் பேரமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் வணிகர்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி இன்று தென்காசி தினசரி காய்கறி சந்தையில் உள்ள கடைகளில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் லூர்து நாடார் தலைமையில் வணிகர்களுக்கான காவல் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்திய நாடார்கள் பேரமைப்பு தென்காசி நகர தலைவர் சுப்ரமணியன், சுரண்டை நகர தலைவர் ஆனந்த் காசிராஜன், தென்காசி தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் பாண்டியன், செயலாளர் நாராயணன், துணைத் தலைவர் ராமசாமி, பொருளாளர் சுடலை கனி, துணைச் செயலாளர் வெங்கடேஷ், துணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன், தென்காசி வியாபாரிகள் சங்க தலைவர் பரமசிவன், செயலாளர் மாரியப்பன், துனைசெயலாளர் அருணாச்சலம், பொருளாளர் மைதீன், சந்திரமதி ராஜா உட்பட வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Jun 2022 12:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா