/* */

பழுது அடைந்த சாலைகளை சீரமைக்க கோரி சட்டமன்ற உறுப்பினர் மனு

தென்காசியில் பழுது அடைந்த சாலைகளை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மனு வழங்கினார்.

HIGHLIGHTS

பழுது அடைந்த சாலைகளை சீரமைக்க கோரி சட்டமன்ற உறுப்பினர் மனு
X

பழுதான சாலைகளை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியிடம் மனு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் பணி நாடார்.

தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பழனி நாடார். காங்கிரஸ் கட்சி சார்ந்த இவர் தனது தொகுதிக்கான பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்த அவ்வப்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கி வருகிறார்.

அதன் அடிப்படையில் தென்காசி சட்டமன்ற தொகுதியில், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கருவந்தா கிராமத்தில் இருந்து இரதயமுடையார் குளம் வரை செல்லும் தார் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அந்த சாலையை போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில், கருவந்தா கிராமத்தில் இருந்து இரதமுடையார் குளம் வரை செல்லும் பழுதான தார்சாலையை புதுப்பித்து அமைக்க வேண்டும் என்றும், கருவந்தா கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் நீர் ஆதாரம் பெறுகின்ற வகையில் ஒரு புதிய கிணறு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷிடம் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மனு வழங்கினார். அவருடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி, இளைஞரணி சந்தோஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 8 Jan 2023 7:55 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...