இலஞ்சி அருகே 80 வயது முதியவர் அடித்துக் கொலை

இலஞ்சி செல்லும் வழியில் மாந்தோப்பில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றாலம் காவல்துறையினர் விசாரணை.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இலஞ்சி அருகே 80 வயது முதியவர் அடித்துக் கொலை
X

பைல் படம்.

தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியை சேர்ந்தவர் கோட்டை மாடன்(80). இவர்க்கு திருமணமான நிலையில் 3 மகள்கள் உள்ளனர். இவர் அரசு பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் இலஞ்சியில் அவர்க்கு சொந்தமான மாந்தோப்பை பராமரித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை நண்பர்களுடன் டீ குடித்துவிட்டு தோப்பிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து தோப்பில் உள்ள வரப்பில் வாயில் இரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவரை பார்த்த தோட்டத்திற்கு அருகில் உள்ளவர்கள் காவல்துறையினர்க்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் குற்றாலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் மர்மமான நிலையில் இறந்து கிடந்ததால் உடலை கைப்பற்றி தென்காசி அரசு தலைமை மருத்துவமணையில் உள்ள பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேற்கொண்டு விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 May 2022 1:45 PM GMT

Related News