/* */

தென்காசி மாவட்டம் : சுரண்டை பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

சுரண்டை பேரூராட்சி பகுதியில் சுகாதாப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம் : சுரண்டை பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
X

தென்காசி மாவட்டம், சுரண்டை பேரூராட்சி பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

சுரண்டை பேரூராட்சி அலுவலகம், பிரதான சாலை, குடிநீர் தொட்டி, கீழச்சுரண்டை மற்றும் 15ஆவது வார்டுகளில் ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது பேரூராட்சி அதிகாரிகளிடம் குடிநீர் வினியோகம், சுகாதாரம் மற்றும் டெங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர், அவர் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் சீராக செய்யவும் டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார். மேலும், அப்பகுதியில் காத்திருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, பேருந்து நிலையம் மற்றும் கழிப்பிடங்களை ஆய்வு செய்த அவர், கழிப்பிடங்களை சுத்தமாக வைத்திருக்கவும், விளக்குகள் அமைக்கவும் மற்றும் செப்டிக் டேங்க் சுத்தப்படுத்தவும் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது, சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கடகோபு, இளநிலை பொறியாளர் கோபி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 20 July 2021 5:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’