/* */

தென்காசி அருகே டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்

தென்காசி அருகே டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்
X

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் அதிகாரிகள் அதிரடி டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சேதுராமன் டெங்கு பாதிக்கப்பட்ட 2 வது வார்டு பெரியநாயகம் கோவில் தெரு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வ பணியாளர்கள் ஆக மொத்தம் 193 பேர் சிறப்பாக பணியாற்றினார்கள். அனைத்து வீடுகளிலும் உள்ள தண்ணீர் தொட்டிகள் ஆய்வு செய்யப்பட்டது. பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு ஒழிப்பு பணியில் வட்டார மருத்துவ அலுவலர் மாரீஸ்வரி, மருத்துவ அலுவலர்கள் முத்துபிரகாஷ்,ஹேம்நாத், மாவட்ட மலேரியா அலுவலர் குருநாதன், பூச்சியியல் வல்லுநர் பாலாஜி, நலக்கல்வியாளர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் மாரியப்பன், கணேசன், துப்புரவு மேற்பார்வையாளர் தர்மர் , ஆகியோர் முன்னிலையில் ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து சுகாதார பணிகளில் தீவிரமாக ஈடுபடவும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன் கேட்டுக்கொண்டார்.

Updated On: 9 March 2021 5:30 AM GMT

Related News