/* */

சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உலகப் புகழ்பெற்ற சிவஸ்தலங்களுள் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு பெருந்திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

சங்கரன்கோவில்  ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்
X

சங்கரன் கோயில் சங்கரநாராயணசுவாமி கோயிலில்  ஆடித்தபசு வைபவத்தையொட்டி கொடியேற்றம் நடந்தது. 

சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஆடித்தபசு பெருந்திருவிழா கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உலகப் புகழ்பெற்ற சிவஸ்தலங்களுள் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு பெருந்திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் கோடி மக்கள் கொண்டாடும் இந்த ஆடித்தபசு திருவிழாவானது கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக‌ ஆகம விதிகளின்படி திருக்கோவிலின் உட்பிரகார வீதிகளில் கொண்டாடப்பட்டது....

இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா தளர்வு உள்ள நிலையில் ஆடித்தபசு பெருந்திருவிழாவானது சிறப்பாக கொண்டாட வேண்டும் என திருக்கோவில் நிர்வாகம் முடிவு செய்த நிலையில் இன்று திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ கோமதி அம்பாள் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்திற்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து பின்னர் நெல் நாற்றுகளுடன் பச்சை பட்டு உடுத்தி தீபாராதனை செய்யப்பட்டு ஆடித்தபசு பெருந்திருவிழா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது...

மேலும் விழாவில் முக்கிய நிகழ்வுகளான திருத்தேரோட்டம் வருகிற ஆகஸ்ட் ‌8ம் தேதி நடைபெறும் எனவும்,சிகர நிகழ்ச்சியான தபசு காட்சி வருகிற 10ம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல் தபசு காட்சி நடைபெறும் எனவும் இரவு காட்சி 12:00 மணிக்கு நடைபெறும் எனவும் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது...

மேலும் வருகிற 10ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது...மேலும் இன்று முதல் 12 நாட்கள் காலை,மாலை ஆகிய வேலைகளில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு காட்சிகளில் எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்...மேலும் தபசு திருவிழாவிற்காக பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளன மேலும் பக்தர்கள் அச்சமின்றி சுவாமி தரிசனம் செய்து செல்லும் வகையில் சீருடை மற்றும் சீருடை அல்லாத காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது......

Updated On: 31 July 2022 7:44 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா