/* */

சங்கரன்கோவில் அருகே காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு

சங்கரன்கோவில் அருகே 2 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனவர் கிணற்றில் பிணமாக மீட்பு.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு
X

பைல் படம்.

சங்கரன்கோவில் அருகே 2 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனவர் கிணற்றில் பிணமாக மீட்பு..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஊத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் மாரியப்பன் (52). இவர் குடும்பத்தை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார். மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சின்னக்கோவிலான்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஊத்தான்குளம் ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் சின்ன கோவிலான் போலீசார் மற்றும் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் மாரியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சின்னக்கோவிலான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  2. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  4. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  5. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  6. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  7. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  8. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  9. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்