/* */

மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் ட்ரோன் கேமரா உதவியுடன் கைது

தென்காசி மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் ட்ரோன் கேமரா உதவியுடன் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் ட்ரோன் கேமரா உதவியுடன் கைது
X

மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் ட்ரோன் கேமரா உதவியுடன் கைது

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கிலிபட்டி பெரிய பாலம் அருகே மணல் திருட்டு நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல்துறையினர் ட்ரோன் கேமரா உதவியுடன் சம்பவ இடத்தில் சோதனை செய்த போது அங்கு சட்ட விரோதமாக உரிய அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சிங்கிலிபட்டி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (29), இந்திரா காலனி பகுதியை சேர்ந்த திருமலைவேலு என்பவரின் மகன் ஜோதி ராஜ் (32), டிப்பர் லாரிகளின் உரிமையாளரான பேபி குமார் மற்றும் தப்பி ஓடிய ஹிட்டாச்சி வாகனத்தின் ஓட்டுநர் ஆகியோர் மீது சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜோதிராஜ் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் ஹிட்டாச்சி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 1 April 2022 6:33 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!