/* */

செங்கோட்டை அருகே வருமுன் காப்போம் திட்ட முகாம்

செங்கோட்டை அருகே வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

செங்கோட்டை அருகே வருமுன் காப்போம் திட்ட முகாம்
X

புளியரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட முகாம்.

தமிழக பொது சுகாதார துறை சார்பில் சுகாதார திருவிழா மற்றுமு் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் செங்கோட்டை வட்டாரம் புளியரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமை தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

இம்முகாமில் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் மற்றும் புதூர் பேரூராட்சி தலைவர் ரவிசங்கர், ஒன்றிய குழு தலைவர் திருமலை செல்வி ஒன்றிய கவுன்சிலர் சுப்புராஜ், புளியரை ஊராட்சி தலைவர் ஐயா என்ற அழகிய திருச்சிற்றம்பலம், கற்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துப்பாண்டி, புதூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஷகிலா பானு மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் திவான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

புளியரை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மோதி வரவேற்புரையாற்றினார். திட்ட முகாம் பற்றி இலத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்செல்வி விரிவாக எடுத்துரைத்தார். வருமுன் காப்போம் திட்டம் சிகிச்சை அட்டை, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் அட்டை, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் பயனாளிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார்.

இம்முகாமில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், கண் மருத்துவம், காது-மூக்கு-தொண்டை பல் சித்த மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், தோல் சிகிச்சை கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இசிஜி ஸ்கேன் ஆய்வு சார்ந்த பரிசோதனைகளும் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் உணவு பாதுகாப்பு, சித்த மருத்துவம், டெங்கு சிக்கன்குனியா, குடும்பநலம், தொழு நோய், காசநோய் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை ஊட்டச்சத்து துறை சார்ந்த பணியாளர்கள் கொண்டு கண்காட்சி முகாம் நடைபெற்றது.

முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்தல், சஞ்சீவினி எனப்படுகிற தொலைபேசி வாயிலான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. ரத்ததானம் முகாமும் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புகிறவர்கள் பெயர்களும் பதிவு செய்யப்பட்டன.

முகாமில் ஒருவர் உடல் உறுப்புதானம் செய்ததோடு பல்வேறு நபர்கள் ரத்ததானம் வழங்கி சிறப்பித்தார். முகாமினை தென்காசி மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அனிதா அறிவுறுத்தலின்படி, செங்கோட்டை வட்டார சுகாதார பணியாளர்கள் அனைவரும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த சுகாதார திருவிழாவின் பங்குபெற்ற அனைவருக்கும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் வாழ்த்துக் கூறி நன்றியுரை வழங்கினார்.

Updated On: 28 April 2022 4:28 AM GMT

Related News