/* */

வெயிலை சமாளிக்க நீர்,மோர் பந்தல் திறப்பு

வெயிலை சமாளிக்க நீர்,மோர் பந்தல் திறப்பு
X

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

கடையநல்லூரில் நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் கோடை வெயிலை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பேராசிரியர் செல்லத்துரை முன்னிலை வகித்தார்.

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, தனுஷ் குமார் எம்.பி ஆகியோர் பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் சேகனா, முகம்மது அலி, மசூது, மைதீன் பிச்சை, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், ஒன்றிய துணை செயலாளர் ஷாஜகான், ஆசாத், முருகையா, ஈஸ்வரன், நகர மாணவரணி பெருமாள் துரை,மணிகண்டன், மூர்த்தி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் இன்பராஜ், காஜா, அசன், அரபா வகாப், ஆதினம், மயில்சாமி,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கருப்பண்ணன், சீதாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 April 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!