/* */

3 மாதத்தில் 17 பாலியல் தொந்தரவு வழக்குகள் பதிவு: ஏடிஎஸ்பி., ராஜேந்திரன் பேட்டி

கடந்த 3 மாதத்தில் 17 பாலியல் தொந்தரவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏடிஎஸ்பி., ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

3 மாதத்தில் 17 பாலியல் தொந்தரவு வழக்குகள் பதிவு: ஏடிஎஸ்பி., ராஜேந்திரன் பேட்டி
X

செய்தியாளர்களை சந்தித்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சார்பில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் போது, மாணவர்களுக்கு நல்ல மற்றும் மோசமான தொடுதல் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு பெண் காவலர்களை வைத்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அதனைதொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நாட்டின் எதிர்கால சக்திகளான இன்றைய குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை அழைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களை மறைக்கும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 11 பாலியல் தொடர்பான குற்றங்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் தொந்தரவில் ஈடுபட்டால் தண்டனை உறுதி என்கிற தகவல் சமூகத்தில் பரவி வருகிறது. சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு அனைவரது ஒத்துழைப்பும் இருந்தால் பாலியல் தொந்தரவே இல்லை என்கிற நிலை ஏற்படும்.

மேலும் குழந்தை திருமணங்களை தடுக்க காவல் துறையினர் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள காவல் நிலையம் தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Updated On: 19 Dec 2021 4:05 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு