/* */

ஆலங்குளத்தில் இளைஞர்களின் முயற்சியால் 250 வருட ஆலமரம் மாற்று இடத்தில் நடவு

ஆலங்குளத்தில் இளைஞர்களின் முயற்சியால் 250 வருட பழமையான ஆலமரம் வேருடன் பிடுங்கப்பட்டு மாற்று இடத்தில் நடவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ஆலங்குளத்தில் இளைஞர்களின் முயற்சியால் 250 வருட ஆலமரம் மாற்று இடத்தில் நடவு
X

வேருடன் பிடுங்கப்படும் 250  ஆண்டு பழமையான ஆலமரம்.

இளைஞர்களின் முயற்சியால் ஆலங்குளத்தில் 250 வருட பழமையான ஆலமரம் நான்கு வழிச்சாலை பணிக்காக வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடப்பட்டது.

நெல்லை தென்காசி நான்குவழிச்சாலை பணிக்காக நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஒப்பந்ததாரர்களால் சாலையோர மரங்கள் வெட்டப்பட்டும், சில இடங்களில் மாற்று இடங்களில் மறுநடவு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆலங்குளம் பஸ் நிலையம் கீழ்புறம் சுமார் 250 ஆண்டுக்கு மேலான பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. சாலை பணிக்காக இந்த மரம் கிளைகள் வெட்டும் பணி கடந்த வாரம் துவங்கியது.

நடப்பட்ட ஆலமரம்.

ஆலங்குளத்தின் பெருமையாக கருதப்படும் இந்த ஆலமரத்தை மறுநடவு செய்ய வேண்டும் என முடிவு செய்த ஆலங்குளம் பசுமை இயக்கம் தலைவர் சாமுவேல் பிரபு, அசுரா நண்பர்கள் ராஜா, குணா ஆகியோர் நெடுஞ்சாலைத்துறையினரிடம் அனுமதி பெற்றனர். இதனையெடுத்து அந்த மரம் வெட்டாமல் நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் சிலர் பண உதவி செய்தனர். இதனையடுத்து நேற்றைய தினம் இரவு 2 கிரேன், 2ஜேசிபி உதவியுடன் 16 டன் எடை உள்ள ஆலமரம் வேருடன் அகற்றப்பட்டு கடும் சிரமத்திற்கு இடையே ஆலங்குளம் தொட்டியான்குளத்தின் கரையோரம் நடப்பட்டது.

இந்த பணியில் ஆலங்குளத்தில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள், ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மரத்தை மாற்றி நடுவதற்கு முயற்சி எடுத்த ஆலங்குளம் பசுமை இயக்கம் மற்றும் அசுரா நண்பர்களை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள்.

Updated On: 26 May 2022 5:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?