/* */

சிவகங்கை அருகே வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்: அமைச்சர் தொடக்கம்

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

சிவகங்கை அருகே வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்: அமைச்சர் தொடக்கம்
X

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், ஜெயங்கொண்டநிலை ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 24-வது மருத்துவ முகாமை அமைச்சர் தொடக்கி வைத்தார்.

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், ஜெயங்கொண்டநிலை ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 24-வது மருத்துவ முகாமினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழக முதலமைச்சர், தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் நலன் காக்கின்ற வகையில், அவர்களின் உடல் நலத்தினை பேணிக்காத்திடும் பொருட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, அதன்மூலம் பொதுமக்களின் நலனை பாதுகாத்து வருகிறார்கள். மாநிலத்தில் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று, சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, உயிர் காக்கும் மருத்துவச் சேவையை பொதுமக்களுக்கு வழங்கிடும் பொருட்டும், பொதுமக்கள் வசிக்கும் அந்தந்தப் பகுதிகளிலேயே சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி, அவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறார்கள்.

அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்" மருத்துவ முகாம்கள் ஒரு வட்டாரத்திற்கு மூன்று முகாம்கள் வீதம் நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் கடந்தாண்டு 2021-2022-ஆம் ஆண்டில் 36 முகாம்கள் நடத்தப்பட்டு, அம்முகாம்களின் மூலம் 22,278 பேர் பயன் பெற்றனர்.

அதேபோன்று நடப்பாண்டலான 2022-2023-ஆம் ஆண்டிற்கும் 36 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, தற்சமயம் வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 24 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, சிங்கம்புணரி வட்டம், ஜெயங்கொண்டநிலை ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்றையதினம் "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்" கீழ் 24-வது சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

இம்முகாமில், பொது மருத்துவர் மற்றும் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு இதய நோய் மருத்துவம், சிறுநீரகம் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மருத்துவம், மனநல மருத்துவம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவத்துறைகளை கொண்டு பரிசோதனை செய்து, நோயைக் கண்டறிந்து, தேவைப்படுவோருக்கு உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனமும் காசநோய்ப் பிரிவின் மூலம் இங்கு நிறுவப்பட்டுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட காசநோய் கணக்கெடுப்பில் தீவிர காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, காசநோய் தொற்று விகிதம் குறைந்துள்ளதாக தமிழகத்தில் 8 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் ஒன்றான சிவகங்கை மாவட்டத்தில் காசநோய் பிரிவு சிறப்பான பணிகளை மேற்கொண்டதன் அடிப்படையில், தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.2.00 இலட்சம் பரிசுத்தொகையும் பெற்றுள்ளது.

அத்தொகயைக் கொண்டு மொத்தம் 7 இருகண் நுண்ணோக்கிகள் பெறப்பட்டு, அதனை சிங்கம்புணரி, திருப்பத்தூர், திருப்புவனம், மானாமதுரை ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கும் மற்றும் காளையார்மங்கலம், கண்ணங்குடி, எஸ்.புதூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் காசநோய் கண்டறிதலை மேம்படுத்தும் வகையில், இக்கருவி இன்றையதினம் வழங்கப்படுகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர், வழியில் சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, இதுபோன்று பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்கள். பொதுமக்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் இதுபோன்று நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில், கலந்து கொண்டு தங்கள் உடல்நலம் சார்ந்து உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், 15 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள் மற்றும் 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர்கள் மருத்துவர் ச.ராம்கணேஷ் (சுகாதாரத்துறை), மருத்துவர் ராஜசேகரன் (காசநோய்), ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சசிக்குமார், உதயசூரியன், ஜெயங்கொண்டநிலை ஊராட்சி மன்றத்தலைவர் பி.ஆர்.சுந்தர்ராஜ், வட்டாட்சியர் கயல்செல்வி, சிங்கம்புணரி வட்டார மருத்துவ அலுவலர் மரு.நபீசாபானு, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சிகப்பாயி ராஜா மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Sep 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது