/* */

சிவகங்கையில் நகர்புற வாழ்விட மேம்பாட்டுக்குழு கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் வாழும் நகர்ப்புற ஏழைகளுக்கு சிறந்த வாழ்க்கைநிலை, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது குறித்து ஆய்வு

HIGHLIGHTS

சிவகங்கையில் நகர்புற வாழ்விட மேம்பாட்டுக்குழு  கூட்டம்
X

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்ற மாவட்ட நகர்ப்புற ஏழைகள் வாழ்விட மேம்பாட்டுக்குழு கூட்டம் 

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நகர்ப்புற ஏழைகள் வாழ்விட மேம்பாட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மதுரை திட்ட செயலாக்க கோட்டம் மூலம், சிவகங்கை மாவட்ட நகர்ப்புற ஏழைகள் வாழ்விட மேம்பாட்டுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி), செந்தில்நாதன் (சிவகங்கை), ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தில் வாழும் நகர்ப்புற ஏழைகளுக்கு சிறந்த வாழ்க்கைநிலை, அடிப்படை வசதிகள் மற்றும் சாதகமான சூழலை உருவாக்கிட பல்வேறு துறைகளிடையே ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தி, பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் சென்று அடையவும், சுகாதாரமற்ற பகுதிகளில் வாழும் குடும்பங்களின் குறைகளை நிவர்த்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பா.மணிவண்ணன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மதுரை திட்ட செயலாக்க கோட்ட நிர்வாகப் பொறியாளர் வி.ராமகிருஷ்ணன், உதவி நிர்வாகப் பொறியாளர் மா.புஷ்பராஜன், இளநிலை பொறியாளர் ஆ.பாஸ்டின் விக்டர் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 May 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...