/* */

தேவகோட்டை அருகே தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி

தேவகோட்டை அருகே செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

தேவகோட்டை அருகே  தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி
X

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

தேவகோட்டை அருகே அரசு சார்பில், புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், கண்டதேவி ஊராட்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் , புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. இப்புகைப்படக் கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் சாதனைகள், தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றம், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில், நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன.

மேலும் இக்கண்காட்சியில், அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது, யாரை அணுகி பெறவேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அலுவலர்களால் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

புகைப்படக் கண்காட்சியை, பார்வையிட்ட பொதுமக்கள் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், நலத்திட்ட உதவிகளை யாரை அணுகிப் பெறவேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்வதற்கும் வசதியாக இப்புகைப்படக் கண்காட்சி பெரிதும் உதவியாக இருந்தது என, பொதுமக்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. கண்காட்சியை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.

இப்புகைப்படக் கண்காட்சியினை அமைக்கும் பணியை, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அலுவலர்கள் சிறப்பாக மேற்கொண்டனர்.

Updated On: 8 Nov 2023 11:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது