/* */

வருமுன் காப்போம் திட்டம்: வாழப்பாடியில் துவங்கி வைத்தார் முதலமைச்சர்

வருமுன் காப்போம் திட்டத்தை, வாழப்பாடியில் துவக்கி வைத்து, ரூ. 24.73 கோடியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

HIGHLIGHTS

வருமுன் காப்போம் திட்டம்: வாழப்பாடியில் துவங்கி வைத்தார் முதலமைச்சர்
X

வாழப்பாடியில், வருமுன் காப்போம் திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு, வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். நடப்பாண்டில் 1250 முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில், 2530 பயனாளிகளுக்கு 24.73 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார். இதில் 100% கொரானா தடுப்பூசி செலுத்தும் இலக்கினை அடைந்த அத்தனூர்பட்டி, முத்தம்பட்டி, குறிச்சி, தலைவாசல், மஞ்சகுட்டை ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு, சான்றிதழை முதலமைச்சர் வழங்கினார்.


இதேபோன்று, கொரோனா நோய் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரண நிதியை வழங்கிய முதலமைச்சர் , வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கடன், மற்றும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் திட்டத்தினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

Updated On: 29 Sep 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை